போன பதிவில் ஜென்சி பாடின மலையாள பாட்டு பற்றியும் , தமிழ் பாடல்களுக்கு நடுவில் மலையாள பாடல் வரிகள் வந்து இருப்பதை பற்றி சொல்லி இருந்தேன் . நிறைய நண்பர்கள் ஜென்சி இப்படி ஒரு அழகான மலையாள பாடலை தமிழ் படத்தில் பாடி இருக்கிறாரா ? .... நல்லா இருக்கு என்றும்,சிலர் சிறு வயதில் ரேடியோவில் கேட்டதாக ஞாபகம் என்றும் சொல்லி இருந்தார்கள் .
அவர்களை சொல்லி குற்றம் இல்லை . ஜென்சி பாடியது அதிகபட்சமாக ஒரு முப்பது பாடல்கள் தான் இருக்கும். ( முடிந்தால் எல்லா பாடல்களையும் தேடி எடுத்து போடப்பார்க்கிறேன் )
ஜென்சி பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்கள் தாம். அவற்றில் ஒன்று தான் நாம் இப்போது பார்ப்பது. பாடல் இடம் பெற்ற படம் "தை பொங்கல்" இந்த படதில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்."பனி விழும் பூ நிலவில்" பாடலை பற்றி இங்கு பார்க்கவும் .
"தீர்த்த கரைதனிலே.. " என்று பாரதியார் பாடல் வரிகளைக் கொண்டு தொடங்கும் இந்த பாடலை எழுதியது M.G.வல்லபன். 'தீர்த்த கரைதனிலே' யில் இரண்டு பாடல்கள் உண்டு . ஒன்று ஜேசுதாஸ் பாடியது , இன்னொன்று ஜென்சி பாடியது . இந்திய வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடலாகும்.அது சோகப்பாடல்.
ஆனால் ஜென்சி பாடியது டூயட் பாடல் ஆகும்.இரண்டு பாடல்களுக்கும் இடையிசையில் சிறிது வித்தியாசம் காட்டி இருப்பார் இளையராஜா. பாடல் வரிகளிலும் சிறிய வித்தியாசம் இருக்கும் .
அது என்னமோ தெரியவில்லை ஜென்சி பாடிய பாடலை இந்திய வானொலி நிலையங்கள் அதிகமாக ஒலிபரப்பவில்லை. ஆனால் இலங்கை வானொலி இதை அதிகம் ஒலிபரப்பியுள்ளது. அதே போல "கரும்பு வில்" என்ற படத்தில் "மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் " என்ற பாடல். அதிலும் KJ ஜேசுதாஸ் பாடிய பாடலை தான் இந்திய வானொலி நிலையங்கள் அதிகம் ஒலிபரப்பி உள்ளது. இப்பவும் அவர் பாடிய பாடலை தான் ஒலிபரப்புகிறார்கள். இந்த படத்தை போலவே கரும்பு வில் படத்திலும் அந்த பாடல் படத்தில் இடம்பெற்று இருக்கும்.
இதில் இந்த பாடலுக்கு ராதிகா பரத நாட்டியம் ஆடுவது போல ஆடியிருப்பார். தைய தக்கா என்று ஆடி இருப்பதை பார்க்க நன்றாக சிரிப்பு வரும் அதே போல் "கிழக்கே போகும் ரயில் " படத்தில் "மாஞ்சோலை கிளிதானோ" என்ற பாடலுக்கு ராதிகா பரதநாட்டியம் ஆடி இருப்பதை பார்த்தாலும் சிரிப்பு வரும்.
ஒரு அழகான பாட்டுக்கு எப்படி காட்சியமைப்பு அமைக்கக் கூடாது என்பதற்கு இந்தப் பாடலின் காட்சியமைபை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய Download Here
ஜென்சி இந்தப் பாடலை மிக அனாசியமாக பாடி இருப்பார். ஓ ..ஓ.... ஓ.... என்று முதலில் அவர் பாடும் ஹம்மிங்க் முதலே நம்மை பாடலுக்குள் இழுத்து விட்டு இருப்பார். (யேசுதாஸ் பாடிய பாடலுக்கும் அதே ஹம்மிங்க் தான் ..... )
Flim :Thai Pongal|Music:Maestro Illayaraja| Lyricist:MG Vallaban | Singer:Jency | Year : 1980
"நாண... மேக வானிலே,நானும் நீயும் கூடியே..
மோக ராகம் பாடியே..போடும் காதல் நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய"
என்று ஏணி வைத்து ஏறி மேலே போய் ,
கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே
என்று இறங்கி வந்து
கொஞ்ச வா......
என்று கொஞ்சி முடித்து இருக்கும் மெட்டு , இளையராஜா அசத்தி இருப்பார் .
பாடல் வரிகள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது யேசுதாஸ் பாடிய சோக பாடல் வரிகள் )
ஓ..ஓ..ஓ ஓ.......ஓ.ஓ.ஓ......
தீர்த்த கரைதனிலே.....!
செண்பக புஸ்பங்களே
தீர்த்த கரைதனிலே
செண்பக புஸ்பங்களே
தாய் மாமன் தோள் மீது சாய்ந்தாடும்
நாள் பார்த்து பாடுங்கள் தேவ கானங்கள்
(நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள்...ஜீவ ராகங்கள்)
தீர்த்த கரைதனிலே..ஏ..
செண்பக புஸ்பங்களே
நாண... மேக வானிலே
நானும் நீயும் கூடியே..
மோக ராகம் பாடியே..
போடும் காதல் ( சோக ) நாடகம்
காவிரி ஓரமாய்
கோவலன் காதலி
பூவிழி மாதவி
காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே
கொஞ்ச வா...
தீர்த்த கரைதனிலே...
செண்பக புஸ்பங்களே
சோம வார (ராம நாம) நோன்புகள்
காம....தேவ ஜாலங்கள்
பாதிஜாம பூஜைகள் (ஆசைகள்)
காணகோடி ஆசைகள்...
காவிரி ஓரமாய்
கோவலன் காதலி
பூவிழி மாதவி
காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே
கொஞ்ச வா......
தீர்த்த கரைதனிலே
செண்பக புஸ்பங்களே
நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள்...ஜீவ ராகங்கள்
தீர்த்த கரைதனிலே..ஏ..
செண்பக புஸ்பங்களே
No comments:
Post a Comment