Search This Blog

Pages

Sunday, May 24, 2020

எரியிலே இலந்த மரம் , தங்கச்சி வச்ச மரம்...!


Ber Jujube இலந்தை பழம்
கடைக்கு பொருட்கள் வாங்க போய் இருந்த போது இலந்தை வடையை  அருமையாக பாக் செய்து விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். எல்‌ஆர் ஈஸ்வரி பாடிய " எயந்த பயம் எயந்த பயம் " பாட்டு ஞாபகம் வந்தது. இதன் தாவரவியல் பெயர் சிகிபஸ் ஜூ ஜூ பா , ரம்நாசியே குடும்பத்தையே சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் விபரங்கள் கொடுத்து உங்களை வெறுப்பேத்த விரும்ப வில்லை .

இலந்தை வடையை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்த இன்னொரு பாட்டு " எரியிலே இலந்த மரம் தங்கச்கி வச்ச மரம்...!" பாடல் தான். நான் ஒரு தீவிர எழுத்தாளர் சுஜாதா வாசகன் . அவர் எழுதிய ஒரு திரில்லர் நாவலை படமாக எடுத்த ஒரு படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்று உள்ளது. படத்தின் பெயர் " கரை எல்லாம் செண்பக பூ ". 

KaraiyellamShenbagapoo.jpg
சிறுவனாக இருக்கும் போதே வானொலியில் நான்கு கேட்ட பாடல் இது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் . கொஞ்சம் பெரியவன் ஆனதும் , சுஜாத்தாவின் "கரை எல்லாம் செண்பக பூ" நாவலை படிக்கும் போது அட இந்த தலைப்பில் ஒரு படம் இருக்குதே என்று பார்த்தால் , அவரின் நாவலை தான் படமாக எடுத்து இருந்தார்கள். நல்ல வேலை "ப்ரியா " படத்தை போல இப்படத்தை கந்தரகோலம் ஆக்க வில்லை . ஓரளவுக்கு நாவலில் இருப்பதை போன்றே எடுத்து இருந்தார்கள் . ஒரு சில மாற்றங்கள் தவிர. 
Download Here 


 Flim:Karaiyellam Shenbagapoo |Music:Maestro Illayaraja| Lyricist:Panchu Arunachalam | Singers : S. Janaki, Ilaiyaraaja & Chorus | Year : 1981

இந்த பாடலில் நாட்டுபுற பாடலும் , கிராமத்து இசையும் , மேற்கத்திய இசையும் கலந்து ஒரு கலவையாக இருக்கும். இளையராஜா எப்படி பாட்டு சொல்லி கொடுத்து பாடவைத்து இருப்பார் என்பதை இந்த பாட்டில் அறிந்து கொள்ளலாம் . அதனால் தான் பாட்டு எப்படி ஆரம்பம் ஆகிறது என்று தொடக்கத்தில் இருந்து கொடுத்து இருக்கிறேன் . ஹெட் போனில் கேட்டு பாருங்கள் . பாஸ் கிட்டார் எப்படி இசைக்கிறது என்று உற்று கேளுங்கள்.பின்னர் புரியும்,நாட்டுபுற பாட்டுக்கு வெஸ்ட்ர்ன் இசை எப்படி கலக்கிறது என்று .... இளையராஜாவின் அற்ப்புதமே அது தானே .

இப்படி ஒரு கிராமத்து பாடல்களின் பின்னனியில் ஒரு கிரைம் கதையை எழுதுங்கள் என்று இளையராஜா சுஜாத்தாவிடம் கேட்டு கொண்டதால் அவர் எழுதிய நாவல் தான் கரை எல்லாம் செண்பக பூ . ஆனந்த விகடனில் தொடராக வந்து உள்ளது . தொடருக்கு செம்ம வரவேற்பு .சுஜாத்தாவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று....

அதனால் நிறைய தயாரிப்பாளர்கள் குறிப்பாக சாவி, பிரமிட் நடராஜன் , பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் விரும்பி இருந்தனர் . கடைசியில் தயாரிப்பாளர் சண்முக சுந்தரம் தயாரிக்க , ஜி‌என் ரங்கராஜன் இயக்கத்தில் பிரதாப் போத்தான், ஸ்ரீபிரியா , மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 14 ஆகஸ்ட் 1981 இல் வெளிவந்தது . படம் எதிர்பார்த்த அளவிர்க்கு ஓடவில்லை.

நாட்டுபுற பாட்டு ஆராட்ச்சி செய்யும் வாலிபன், ஜமீன்தார் மாளிகை ,கொலை மர்மம் , இவற்றை மக்கள் அவ்வளவாக ரசிக்க வில்லை போலும். நாவலில் காட்டிய ஆதரவை படத்தில் மக்கள் காட்டவில்லை . வார வாரம் தொடர்ச்சியாக அடுத்து என்ன வருமோ , எப்படி வருமோ என்ற சஸ்பென்ஸ் படத்தில் தொடர்ச்சியாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் . கொலை என்றாலே கத்தி, ரத்தம், போலீஸ் துரத்தல் என்று பழகி போனதினாலும் இருக்கலாம் .

படத்தில் வரும் நாட்டு புறப்பாடல்கள் எல்லாம் "தமிழர் நாட்டுப் பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்த நா. வாமனமாலை அவர்களுடையது . முறையான அனுமதியுடன் பாடல்களை அவர் உபயோகபடுத்தி இருப்பார். படத்தில் ஒரு வில்லு பாட்டும் வருகிறது . இதுவரை பார்க்காதவர்கள், நாவலை படிக்காதவர்கள் கட்டாயம் பார்க்க /படிக்க பரிந்துரைக்கிறேன் .

முத்தாய்ப்பாக படத்தை இயக்கியது ரங்கராஜன் என்றால் கதை எழுதியது இன்னொரு ரங்கராஜன் . சுஜாதாவின் உண்மை பெயர் ரங்கராஜன் .

பாடல் வரிகள் :

ஏரியிலே எலந்தமரம்
தங்கச்சி வச்ச மரம்..
ஒரு காயுமில்ல..
பூவுமில்ல..
உன் தங்கச்சி வச்ச மரம்...

வெள்ளிமலையிலே தேனருவி.
வேப்பமரத்திலே பூங்குருவி.
வாழையிலையிலே ஒடற காத்து
ஆடுற கூத்து காணலியோ...
அழகுபெத்தச் சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்.
செண்டுக மேலே வண்டுக வந்து
உண்டது தேன போதையிலே
ஆனந்தந்தானே போகையிலே..

அல்லி கொளத்திலே தாமரையா.
முல்லை கொடியிலே செண்பகமா.
தென்னை மரத்திலே மாங்காத் தேடும்
மடையன் சொன்னா கேட்டுக்கடா..
வளர்ந்துவிட்ட வாத்துக்களே...
ஓடுறப் பக்கம் ஓடுங்களே...
வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே...

2 comments:

  1. சூப்பர்

    ReplyDelete
  2. https://youtu.be/Z36inx4PfHA?si=My1oEXVRMwDStSLK

    ReplyDelete