நினைவோ ஒரு பறவை
எனது பள்ளித் தோழி பரமேஸ்வரி அவர்களின் தம்பி திரு கல்கி கார்த்தி (ஒரிஜினல் டிராக் ஆடியோ பாடல்கள் ) அவர்கள் அனுப்பிய இந்த இரங்கல் கட்டுரையை அப்படியே கொடுத்து இருக்கிறேன் .
புகைபடங்கள் நன்றி : Flute King கல்கி சரவணன் .
திரையுலகால் மறக்கப்பட முடியாத கலைஞன் புருஷோத்தமன்
(இரத்த புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன் சிகிச்சை பலன் இன்றி காலமானார் )

1978 இல் ராஜா, கமல்ஹாசன் பாரதிராஜா பாக்யராஜின் இணைப்பில் உருவாகிய சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் பாடல்கள் எல்லாமே அருமையானவை. இதிலே கமல் பாடிய "நினைவோ ஒரு பறவை" என்ற பாடல் உருவான கதை சுவராஸ்யமானது, அந்தக்காலகட்டத்தில் பிரபலமாகியிருந்த ஆங்கிலப்பாடலொன்றைக் கமல்ஹாசன் ஹம் பண்ணியதை எதேச்சையாகக் கேட்ட ராஜா அதே ஹம்மிங்கைப் போன்ற ஒன்றைச் சேர்த்து உருவாக்கிய பாடல்தான் நினைவோ ஒரு பறவை.
அதுமட்டுமல்லாமல். அந்தப்பாடலையும் மதிப்புக்குரிய ஜானகியுடன் சேர்த்து கமலையே பாடவைத்திருப்பார் ராஜா.
இந்தச் சுவையான சம்பவத்தை கமலும் ராஜாவும் சேர்ந்து பங்காற்றிய சில நிகழ்ச்சிகளிலும் கமல் நினைவுகூர்ந்து மகிழ்ந்திருப்பார். ஆனால் இந்தப்பாடலில் இன்னொரு விஷேடமும் அடங்கியுள்ளது அதை அந்தப்பாடல் ஒலிப்பதிவில் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் தவிர்த்து மற்றய எல்லோருமே அனேகமாக மறந்துவிட்டார்கள் அது என்னவென்றால் இந்தப்பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரோட்டோ ( Rototom ) என்ற புதியவகை ட்ரம்ஸ் உபயோகப்படுத்தப்பட்டது...பாடலின் இடையிசைகளைக் கேட்டுப் பாருங்கள் அதிலே மேலிருந்து கீழாக ஒரு ட்ரம்ஸ் ஒன்று ஒலிப்பதைக் கேட்கலாம் அதுதான் ரோட்டோ டிரம்ப்ஸ் .
இது உருவாக்கப்பட்டது அல்லது இசையுலகில் பயன்பாட்டுக்கு வந்தது 1968ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்து பழகி வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்.
( The Rototom is a drum developed by Al Payson, Robert Grass, and Michael Colgrass that has no shell and is tuned by rotating.[1][2] A rototom consists of a single head in a die-cast zinc or aluminum frame. Unlike most other drums, this type has a variable definite pitch. Composers are known to write for them as tuned instruments, demanding specific pitches. Rototoms are often used to extend the tom range of a standard drum kit. They were commercialized by the drumhead company Remo Inc., of North Hollywood, California.[3])

அந்தக் கலைஞன் அமரராகிவிட்டதை இப்போதுதான் அறிந்தேன் மிகுந்த வருத்தத்துடன் உடனே மனதில் தோன்றியதை எழுதி இதைப்பகிர்கிறேன்.
ராஜாவுடன் பல்லாண்டுகளாக தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிய மூத்த கலைஞர்களில் ஒருவர் இவர் . அவரின் எத்தனையோ பாடல்களில் அற்புதமாக இவரின் ட்ரம்ஸ் வாசிப்பைக் கேட்கலாம்,

- "மேகம் கொட்டட்டும்"
- "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்"
- "வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள"
- "காதல் மகராணி" என எத்தனை எத்தனையோ இனிய பாடல்களில் வாசித்து அசத்தியது இவர்தான்......
ட்ரம்ஸ் மட்டுமல்லாமல் ராஜாவின் கண்டக்டராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய இவர் ஜெயா டிவி வெற்றிகரமாக நடாத்திய மேடை நிகழ்ச்சியான " ராஜா அன்றும் இன்றும் என்றும் " நிகழ்ச்சிதான் இறுதியாக பங்கேற்ற மேடை நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியின் முடிவில் தன்னால் அதிகநேரம் நின்று கொண்டு கண்டக்ட் பண்ண முடியவில்லை எனக்கூறி விடைபெற்றுள்ளார் இவர்.
ராஜாவின் இன்னொரு முக்கிய கிட்டார் கலைஞரான சந்திரசேகர் ரங்கநாதன் இவரின் சகோதரர் ஆவார்..
நானறிய அன்னக்கிளிப் பாடல்களுக்குப் புல்லாங்குழல் வாசித்த
- குணசிங் என்ற ராஜாவின் கலைஞன் தான் முதன் முதல் அமரராகினார்.. அதைத்தொடர்ந்து
- சந்தானம் (நடிகர் TS பாலையாவின் மகன்) கிட்டார் கலைஞர்,....
- பென் சுரேந்தர் - கீபோர்ட்,.....
- நோயல் கிராண்ட் - ட்ரம்ஸ்,.....
- ஃபிராங் டுபெயர் - ட்ரம்பட்,....
- கன்னையா - தப்லா,....
- சுந்தரராஜன் - உதவியாளர்.....
- விஜி மனுவல் - கீபோர்ட் /அரேஞ்சர்....
ஆகிய கலைஞர்களின் வரிசையில் இன்று திரு. புருஷோத்தமனும் போய்ச் சேர்ந்துவிட்டார்.
எத்தனையோ வருஷங்களாக ஒவ்வொருநாளும் எத்தனை எத்தனை பாடல்களில் இவரின் வாசிப்பைக் கேட்டு ரசித்துள்ளோம்.இனியும் கேட்கப்போகிறோம்.
மிகக்கவலையாக உணர்கிறேன்.
இந்த மகா கலைஞனுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த நன்றிகளும் அஞ்சலியையும் இப்பதிவின்மூலம் தெரிவித்து விடைகொடுக்கிறேன்....😔😔😔😔😔💐💐💐💐💐💐
தினமணி செய்தி : இங்கு காணவும் .....

No comments:
Post a Comment