Search This Blog

Pages

Tuesday, April 28, 2020

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

கோரஸ்- எல்லா இசையமைப்பாளர்களும் இதை தங்களது இசையில் ஒரு அம்சமாக பயன் படுத்தி இருப்பார்கள்.

         "ஆஹா... ஹா , ஓஹோஹோ, ல ... ல... லலா ... லாலலலலா, ம்... ம்... ம்" என்று ஹம்மிங்க் கொடுப்பதாகட்டும் இல்லை பாடல்களின் சில வரிகள் ஆகட்டும், மெயின் பாடல்களுக்கு துணையாக பாடுவது கோரஸ் . இதை இளையராஜா மிக அருமையாக கையாண்டிருப்பார். இளையராஜாவின் கோரஸ் என்பது தனித்துவமானது. அதில் எனக்கு பிடித்த ஒரு கோரஸ் கலந்த பாட்டு தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும் "ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" எஸ்‌பி சைலஜாவின் இனிய குரலில் , கவிஞசர் வாலியின் வரிகளுக்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்து இருப்பார்.

    இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் வழக்கமாக கோரஸ் பாடுபவர்களுக்கு ஹம்மிங்க் அல்லது பாடல் வரிகள் இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் அதுபோக பாட்டுக்கான இசையையும் கோரஸ் பாடுபவர்களை கொண்டே அமைத்திருப்பார்.

       பாடலின் 1:05 வது வினாடியில் வரும் இந்த பிட் Perlude ல் "தன தம் தம் தம் தம் தம் , தன தம் தம் தம் தம் தம்" , என்ற ரிததில் கொண்டுபோய் ,"தம் ததம் , தம் ததம்", என்று பாஸ் விட்டு கூடவே கிதாரும் , புல்லாங்குழல் இசையும் இணைத்து அசத்தி இருப்பார் . ஒரு கித்தாரை கொண்டோ அல்லது வேறு இசை கோர்வைகளை கொண்டு இந்த "தம் ... தம்..." இடத்தை நிறைப்பி இருக்கலாம். ஆனால் கோரஸ் பாடகர்களை கொண்டே அதை செய்து இருப்பார் . கோரஸ் குழு ஹம்மிங் பாடி எஸ்‌பி சைலஜாவுக்கு அடுத்த வரிக்கு வழி அமைத்து கொடுத்து இருபார்கள் . கேட்டு பாருங்கள் :

      அடுத்து வரும் கோரஸ்ல்" பிபீபிபீப்... பிபீப்பீ ... பிபீ பி பி பி " என்று நாதஸ்வரத்தை போல கோரஸ் பாடுபவர்களை கொண்டே பாட வைத்திருப்பார். அவர்களுடன் பாஸ் கிதார் அழகாக கூடவே கை கோர்த்து வரும். பின்னர் ரிதம் கிதார் நம்மை பாடலின் அடுத்த வரிகளுக்கு எடுத்துச் செல்லும் . கேட்டு பாருங்கள் :

     இந்தப் பாடல் 80' களில் காதல் வயப்பட்ட இளம் பெண்களின் மனதை படம் பிடித்து காட்டுவதாக இருந்தது .அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அந்த பெண்ணின் ஏக்கத்தை காட்டும். அப்போதைய பெண்களின் வேண்டுதலை அப்படியே இந்த பாடலின் வரிகள் சொல்லும்."மாக்கோலம் போட்டு மாவிளக்கு ஏந்தி நீ கிடைக்க நேர்ந்துக்கிட்டேன்...." இன்னும் சொல்ல போனால் இப்போதைய பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் போகும் 80 களில் இருந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப் பாடலை கேட்டால் கண்டிப்பாக ஓரு மலரும் நினைவுகள் ஓடும் .
பதிவிறக்கம் செய்ய

ஹெட் போன் / இயர் போன் இதில் கேட்க்கவும் :
 Flim :Thanikattu Raja |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:SP Sailaja | Year : 1982


ராசாவே உன்ன நான் எண்ணித்தான
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே... ராசாவே...... ராசா......வே

தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம் தம் தம் தம்
தம் தம் தம் தம் தம் தம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்
 
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராச.....வே

Sunday, April 26, 2020

பணி விழும் பூ நிலவில்

"தை பொங்கல்" . 1980 களில் வெளிவந்த ஒரு நல்ல படம். ராதிகாவை மையமாக வைத்து கதை நகரும். ஆனால் அப்படம் நன்றாக போக வில்லை.  ஏன் எனில் படத்தில் சொல்லப்பட்டு இருந்த கருத்து அந்த கால கட்டதிற்க்கு ஏற்றாற்போல் அல்லாமல் கொஞ்சம் புரட்சிகரமானதாக இருந்தது. ராதிகாவை ஒரு லூசு பெண் போல் இல்லாமல் துயரத்தை தாங்கும் திறமையான பெண் போல காட்டி இருப்பார்கள் .

அது கிடக்கட்டும் ஒரு புறம், ஆனால் அதில் நம் இசை ஞானி இளையராஜா இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட் பாடல்கள் . ஏனோ நம் எஃப்.‌எம். சேனல்கள் ஆகட்டும் , ரேடியோ சேனல்கள் ஆகட்டும் இந்த படத்தில் இருந்து பாடல்கள் அதிகம் போட்டதில்லை . அதில் ஒரு பாடல் " பணி விழும் பூ நிலவில் "இந்த பாடலை அடிக்கடி அப்போ இலங்கை ரேடியோவில் ஒலிபரப்புவார்கள் .  அது போக இளையராஜாவே பாடிய " கண் மலர்களின் அழைப்பிதல் ",  ஜென்சியும் ஏசுதாசும் பாடிய " தீர்த்த கரைதனிலே செண்பக புஷ்பங்களே " ஆகிய பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான ஹிட்டான பாடல்கள் . நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் வாசகர்கள் தபாலில் இந்த பாடல்களை விருப்ப பாடலாக கேட்டு எழுதி இருப்பர் . கால ஓட்டத்தில் இதை மறந்துவிட்டார்கள் .

பாடல் கம்போசிங்கில் நிறைய வாத்திய  கருவிகள் இருந்தாலும் , எல்லாத்தையும் தாண்டி பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் இசை  முன் இசை( prelude) ஆக வந்து , "இனி இந்த பாடலில் நான் தான்பா ஹை லைட் ஆனவள் ,கேட்டுக்கோங்க" என்று சொல்லுவது போல் இருக்கும். அதே போல் பாடலின் 1.05 நிமிடத்தில் முதல் இடை   இசையில் (interlude)ஆரம்பமாகும் அந்த புல்லாங்குழல்   இசையை  (அடிச்சுக்கவே முடியாது) கதாநாயகனின் கனவை அப்படியே தூக்கி கொண்டு செல்லும் போது,  கீ போர்டும் , வயலின் இசையும் ஒரே அடியாக தூக்கி செல்லமால் அப்படியே கிளைட் செய்து  இறக்கி விடும் , கூடவே கித்தாரும் ,மத்தளம் , போங்கோ டிரம்பும் .... அட அட போட வைக்கும். 

3:15 வது நிமிடத்தில் வரும் புல்லாங்குழல் இசை அப்படியே மனதை உருக்கும்,அதே சமயத்தில் ஒரு துள்ளலும் இருக்கும். அநேகமாக புல்லாங்குழல் இசை அருண்மொழியாக தான் இருக்கும். அன்று முதல் இன்று இப்போ வரை இளையராஜா கூட இருக்கும் இசை கலைஞர்களில் ஒருவர் அருண்மொழி . (இவர் பாடிய நிறைய பாடல்கள் செம ஹிட். அது பத்தி இன்னொரு பதிவில் . )

பாட்டின் நடுவே அப்பப்போ டயலாக் போடுவது இசை ஞானிக்கு ஒரு ஹாபி போல.... "அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல, அந்த டயலாக் கூட பாட்டுக்கு ரொம்ப நல்லா ஒத்துபோகுது" . உண்மையில் அந்த டயலாக் பிரேக் அந்த பாடலுக்கு ஒரு தனியான சுவையை , எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது. "சின்னச்சிறு வயதில்- மீண்டும் கோகிலா" , "அடிக்குது குளிரு-மன்னன்" , "என் வானிலே பொன் வெண்ணிலா -ஜானி" , "சின்ன சின்ன தூறல் ஒன்று -செந்தமிழ் பாட்டு " என்று இப்படி நிறைய படங்களில் பாட்டின் நடுவே வசனம் பேச வைத்து இருப்பார். 
Flim :Thai Pongal|Music:Maestro Illayaraja| Lyricist:MG Vallaban | Singer:Malesiya Vasudevan & SP Sailaja | Year : 1980

இந்தப் பாடலிலும் வசனம் பேச வைத்து இருப்பார். வெறும் கனவு பாடலாக போய் இருக்க வேண்டிய பாடலை சின்ன சின்ன வசனங்களில்  அதை ஒரு ஜாலியான மெல்லிய நகைச்சுவை பாடலாக மாற்றி இருப்பார். பகல் கனவு காண்பவருக்கு பகலில் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தடங்கல் வருவது இயல்பு தானே ....? அதை எப்படி கதாநாயகன் சமாளித்து கனவில் டூயட் பாடுகிறான் என்பது தான் பாடல் காட்சி .

Thursday, April 9, 2020

வான் நிலா அல்ல

"வயலின்" இது ஒரு கம்பி வாத்திய கருவி . ஃபிடில் என்றும் சொல்லுவார்கள். இத்தாலியில் இருந்து வந்தது இந்த இசைக் கருவி. இத்தாலியில் அநேகமாக எல்லோருக்கும் வயலின் வாசிக்க தெரியும் .பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்த கருவியை உண்மையில் வாசிப்பதற்கு மிகவும் சிரமம். கொஞ்சம் பிசகினாலும் இசை அபஸ்வரமாக போய்விடும். இதில் தேர்ச்சி பெறுவதற்கு மிகுந்த பயிற்சி தேவைப்படும்.குன்னக்குடி வைத்திய நாதன் இதில் கரை கண்டவர்.

அனேகமாக எல்லா மியூசிக்கல் டைரக்டர்களும் வயலின் இசையை தங்களது பாடல்களில் வைத்திருப்பார்கள். வயலின் இசையானது பாடல்களின் நடுவே வரும் ஒரு இசையாகவே இருக்கும்.வயலின் இசைக் கருவியைக் கொண்டு சோகத்தையும் சந்தோஷத்தையும் மிகவும் எளிதாக எடுத்துக்காட்டலாம்.

ஆனால் வயலினை மட்டும் கொண்டு தனி ஆவர்த்தனம் ஆக செய்து ஒரு பாடல் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்றி இருப்பார். கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடலுக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து மணி என்ற வயலின் இசைப்பவர் இசைத்த பாடல் இது.

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த மெட்டுக்கு பாட்டை அமைத்தார். பாடல் உருவான விதம் பற்றி கீழே உள்ளது. பட்டினப் பிரவேசம் என்ற படத்தில் வரும் "வான் நிலா அல்ல உன் வாலிபம் நிலா"  என்ற பாடல் கதா நாயகி மெட்டு போடுவதும் , அதற்க்கு ஏற்ப கதாநாயகன் பாடுவது போன்று அமைந்து இருக்கும் . எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இருப்பார்.

இதேபோன்று வறுமை நிறம் சிகப்பு என்ற படத்தில் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என்ற பாடலும் கதாநாயகி மெட்டுப்போடு கதாநாயகன் பாடுவது போன்று அமைந்திருக்கும் .
  (128  Bit  AAC  File 👇 )(HQ File)
பதிவிறக்கம் செய்ய Download Here 


Flim : Pattina Piravesam  Music: M.S.Viswanathan  | Lyricist: Kannadhasan  | Singer:S.P. Balasubramaniyam | Year : 1977


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

பாடல் உருவான விதம் : 
நன்றி :அட்ரா சக்க💗🙏