"தை பொங்கல்" . 1980 களில் வெளிவந்த ஒரு நல்ல படம். ராதிகாவை மையமாக வைத்து கதை நகரும். ஆனால் அப்படம் நன்றாக போக வில்லை. ஏன் எனில் படத்தில் சொல்லப்பட்டு இருந்த கருத்து அந்த கால கட்டதிற்க்கு ஏற்றாற்போல் அல்லாமல் கொஞ்சம் புரட்சிகரமானதாக இருந்தது. ராதிகாவை ஒரு லூசு பெண் போல் இல்லாமல் துயரத்தை தாங்கும் திறமையான பெண் போல காட்டி இருப்பார்கள் .
அது கிடக்கட்டும் ஒரு புறம், ஆனால் அதில் நம் இசை ஞானி இளையராஜா இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட் பாடல்கள் . ஏனோ நம் எஃப்.எம். சேனல்கள் ஆகட்டும் , ரேடியோ சேனல்கள் ஆகட்டும் இந்த படத்தில் இருந்து பாடல்கள் அதிகம் போட்டதில்லை . அதில் ஒரு பாடல் " பணி விழும் பூ நிலவில் "இந்த பாடலை அடிக்கடி அப்போ இலங்கை ரேடியோவில் ஒலிபரப்புவார்கள் . அது போக இளையராஜாவே பாடிய " கண் மலர்களின் அழைப்பிதல் ", ஜென்சியும் ஏசுதாசும் பாடிய " தீர்த்த கரைதனிலே செண்பக புஷ்பங்களே " ஆகிய பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான ஹிட்டான பாடல்கள் . நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் வாசகர்கள் தபாலில் இந்த பாடல்களை விருப்ப பாடலாக கேட்டு எழுதி இருப்பர் . கால ஓட்டத்தில் இதை மறந்துவிட்டார்கள் .
பாடல் கம்போசிங்கில் நிறைய வாத்திய கருவிகள் இருந்தாலும் , எல்லாத்தையும் தாண்டி பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் இசை முன் இசை( prelude) ஆக வந்து , "இனி இந்த பாடலில் நான் தான்பா ஹை லைட் ஆனவள் ,கேட்டுக்கோங்க" என்று சொல்லுவது போல் இருக்கும். அதே போல் பாடலின் 1.05 நிமிடத்தில் முதல் இடை இசையில் (interlude)ஆரம்பமாகும் அந்த புல்லாங்குழல் இசையை (அடிச்சுக்கவே முடியாது) கதாநாயகனின் கனவை அப்படியே தூக்கி கொண்டு செல்லும் போது, கீ போர்டும் , வயலின் இசையும் ஒரே அடியாக தூக்கி செல்லமால் அப்படியே கிளைட் செய்து இறக்கி விடும் , கூடவே கித்தாரும் ,மத்தளம் , போங்கோ டிரம்பும் .... அட அட போட வைக்கும்.
பாடல் கம்போசிங்கில் நிறைய வாத்திய கருவிகள் இருந்தாலும் , எல்லாத்தையும் தாண்டி பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் இசை முன் இசை( prelude) ஆக வந்து , "இனி இந்த பாடலில் நான் தான்பா ஹை லைட் ஆனவள் ,கேட்டுக்கோங்க" என்று சொல்லுவது போல் இருக்கும். அதே போல் பாடலின் 1.05 நிமிடத்தில் முதல் இடை இசையில் (interlude)ஆரம்பமாகும் அந்த புல்லாங்குழல் இசையை (அடிச்சுக்கவே முடியாது) கதாநாயகனின் கனவை அப்படியே தூக்கி கொண்டு செல்லும் போது, கீ போர்டும் , வயலின் இசையும் ஒரே அடியாக தூக்கி செல்லமால் அப்படியே கிளைட் செய்து இறக்கி விடும் , கூடவே கித்தாரும் ,மத்தளம் , போங்கோ டிரம்பும் .... அட அட போட வைக்கும்.
3:15 வது நிமிடத்தில் வரும் புல்லாங்குழல் இசை அப்படியே மனதை உருக்கும்,அதே சமயத்தில் ஒரு துள்ளலும் இருக்கும். அநேகமாக புல்லாங்குழல் இசை அருண்மொழியாக தான் இருக்கும். அன்று முதல் இன்று இப்போ வரை இளையராஜா கூட இருக்கும் இசை கலைஞர்களில் ஒருவர் அருண்மொழி . (இவர் பாடிய நிறைய பாடல்கள் செம ஹிட். அது பத்தி இன்னொரு பதிவில் . )
பாட்டின் நடுவே அப்பப்போ டயலாக் போடுவது இசை ஞானிக்கு ஒரு ஹாபி போல.... "அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல, அந்த டயலாக் கூட பாட்டுக்கு ரொம்ப நல்லா ஒத்துபோகுது" . உண்மையில் அந்த டயலாக் பிரேக் அந்த பாடலுக்கு ஒரு தனியான சுவையை , எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது. "சின்னச்சிறு வயதில்- மீண்டும் கோகிலா" , "அடிக்குது குளிரு-மன்னன்" , "என் வானிலே பொன் வெண்ணிலா -ஜானி" , "சின்ன சின்ன தூறல் ஒன்று -செந்தமிழ் பாட்டு " என்று இப்படி நிறைய படங்களில் பாட்டின் நடுவே வசனம் பேச வைத்து இருப்பார்.
Flim :Thai Pongal|Music:Maestro Illayaraja| Lyricist:MG Vallaban | Singer:Malesiya Vasudevan & SP Sailaja | Year : 1980
இந்தப் பாடலிலும் வசனம் பேச வைத்து இருப்பார். வெறும் கனவு பாடலாக போய் இருக்க வேண்டிய பாடலை சின்ன சின்ன வசனங்களில் அதை ஒரு ஜாலியான மெல்லிய நகைச்சுவை பாடலாக மாற்றி இருப்பார். பகல் கனவு காண்பவருக்கு பகலில் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தடங்கல் வருவது இயல்பு தானே ....? அதை எப்படி கதாநாயகன் சமாளித்து கனவில் டூயட் பாடுகிறான் என்பது தான் பாடல் காட்சி .
இந்த படத்தில் கதாநாயகன் ( ராஜேஷ் ) கதாநாயகியை (ராதிகா ) நினைத்து பாடுவது போன்ற ஒரு பகல் கனவு பாட்டு . மலேசியா வாசுதேவனும் எஸ்பி ஷைலஜாவும் இணைந்து பாடி இருப்பார்கள் . இருவரது குரல்கள் ராஜேஷ்க்கும் ,ராதிகாவுக்கும் கன கச்சிதமாக பொருந்தி இருக்கும். பாடகர்களை என்ன அடிப்படையில் தேர்வு செய்வாரோ தெரியவில்லை, அவ்வளவு பொருத்தம்.
இந்த பாடலில் இரண்டு முறை டயலாக் வரும். பாடலின் 1.42 வது நிமிடத்தில் ஒரு வசனம்
" நின்னுட்டே தூங்குறானே .... டேய் ...ஏல 10 பைசாவுக்கு பாக்கு வெத்தலை கொடு " .
அதுக்கு ராஜேஷ் கனவை கலைத்து போட்டுட்டியே கிழவி என்று முறைப்புடன் , வேண்டா வெறுப்பாக வெத்தலை எடுத்து
" இந்தா "
என்று கொடுப்பார். கிழவி போனதுக்கு பிறகு மீண்டும் பகல் கனவு.
இந்த பிரேகில் அட அடுத்த வரி என்னவாக பாட போறான் கதாநாயகன் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடும் நமக்கு. வயலின் மற்றும் மத்தளம் இசையுடன் நின்ற பாடல் "மார்பினில் உன் அபிநயம்...." என்று அதே இசையுடன் தொடரும் . பின்னர் 2.53 நிமிடத்தில் ஒரு கிழவனார் வந்து சொடுக்கு போட்டு கூப்பிட்டு
" 10 ரூபாய்க்கு சில்லறை இருக்கா ? "
என்று கேட்டதுக்கு, ரெண்டாவது முறையும் கனவு கலைந்து போனதில் ரொம்ப கடுப்பாகி போயி
" போய்யா உன் வேலையை பார்த்துட்டு "
என்று கோபமாக சொல்லிட்டு கண்ண மூடிட்டு மீண்டும் கனவு பாட்டை தொடர முயற்சிப்பார் , அப்போ அந்த கிழவனார்
" எடுத்துட்டு போனா கூட தெரியாது போல இருக்கு ஹ... " என்று சொல்லுவார்.
மீண்டும் கனவு பாட்டு கதாநாயகனுக்கு தொடரும். கித்தாரும் , கீ போர்டும் மெதுவாக மீண்டும் பாடலுக்கு கை பிடித்து நம்மை கூட்டி போய் , நின்ற இடத்தில் இருந்து மீண்டும் பாடல் தொடங்கும்.
No comments:
Post a Comment