Search This Blog

Pages

Sunday, May 31, 2020

ஹேய் உன்னைத் தானே ....!


(*கண்டிப்பாக கண்டிப்பாக ஹெட் போன் / இயர் போனில் மட்டுமே கேட்க வேண்டும்* 🙏🙏🙏)

முதலில் இந்த இசையை கேட்டு பாருங்கள். நிறைய இடத்தில் நிறைய பேர் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

"போட்டி பாடல்" இது அநேகமாக எல்லா படங்களிலும் நாம் பார்த்து இருப்போம். ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து பாடி போட்டி போடுவது , உதாரணமாக " என்னமா கண்ணு சவுக்கியமா " மிஸ்டர் பாரத் படத்தில் இடம்பெறும் பாடல், முதல் மரியாதையில் வரும் " ஏறாத மாலை மேல ஏறி ",பாடல்கள் போல , இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் நான் எதை பத்தி சொல்ல வருகிறேன் என்று.

அப்படிப்பட்ட ஒரு துள்ளலான போட்டிப் பாட்டு தான் காதல் பரிசு என்ற படத்தில் வரும் "ஹேய் உன்னைத் தானே ....!" என்ற பாடல். ஏ ஆர் ரகுமான் டூயட் என்ற படத்தில் சாக்ஸ் போனை உபயோகப் படுத்தி ஒரு மெலோடி கொடுத்து இருப்பார். ஆனால் இந்தப் பாட்டு இளையராஜா அதே சாக்ஸ்போன்னை கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து அசத்தி இருப்பார் .

படத்தில் பாடகர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான எக்கோ (Echo ) சேர்ந்து இருக்கும். பாடல் என்னவோ போட்டி பாடல் தான் ஆனால் பாடியது ஒரே பாடகர் தான். எஸ் பி பாலசுப்பிரமணியம் மட்டுமே. கமல் பாடும்போது நார்மல் ஆகவும் எதிராளி பாடுவதுபோல இருக்கும் பொழுது கொஞ்சம் குரலை தடித்த மாதிரியும் பாடி வித்தியாசப்படுத்தி இருப்பார். கூடவே ஜானகியும் பாடி இருப்பார்.

1.18 யிள் இருந்து ஆரம்பம் ஆகும் இடை இசையை கேட்டு பாருங்கள். லீட் கித்தார், டிரம்ஸ் , இதனுடன் கீ போர்டு இணைந்து இருக்கும். ஒரு துள்ளலான பாட்டிற்கு கித்தார் , ட்ரம்ஸ், போங்கோ , ஆகியவற்றை உபயோகப்படுத்தினால் அது ஒத்துக் கொள்ள கூடியது ஆனால் நடனத்திற்கு கீபோர்டை உபயோகப்படுத்தி அசத்தியிருப்பார் இளையராஜா.

1.40 வினாடியில் இருந்து 1.45 வரை மட்டுமே வரும் ஐந்து வினாடிகளில் ஒரு த்ரில்லான இசையை நமக்கு காட்டியிருப்பார். படத்தின் கதைப்படி ராதவை கொல்ல ஒரு கும்பல் காத்துக்கொண்டு இருக்கும். அந்த ஆபத்தான சுச்சுவேஷன்னை அந்த ஐந்து வினாடிகளில் நாம் உணர முடியும்.
Download Here (HQ File)  

இதுவரை நார்மலாக போய்க்கொண்டிருந்த ட்ரம்ஸ் இசை அதன் பிறகு சும்மா " டடம் , டடம் ,டடம் என்று பீட்ஸ்ஸூடனும் , டஸ் டஸ் என்ற ரைட் cymbal லும் , (ட்ரம்ஸ் வாசிப்பவர்கள் பக்கத்தில் ஒரு பெருசா வெண்கல தட்டு போல இருக்குமே அது தான்....! ) சும்மா நச்சென்று இருக்கும்.

Flim:Kadhal Parisu  |Music:Maestro Illayaraja| Lyricist: Vairamuthu  | Singers : S P Balasubramaniyam &  S Janaki, | Year : 1987

"வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா" என்ற வரிகளுக்கு பிறகு ஆரம்பமாகும் பாருங்கள் சாக்ஸாபோன் அட்டகாசம், 2.30 வினாடியில் ஆரம்பித்து 3:22 வரை செம துள்ளலாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு டிரம்ஸ் பீட் கூடவே கைகோர்த்துக்கொண்டு வெளுத்து வாங்கி இருக்கும்.

Sunday, May 24, 2020

எரியிலே இலந்த மரம் , தங்கச்சி வச்ச மரம்...!


Ber Jujube இலந்தை பழம்
கடைக்கு பொருட்கள் வாங்க போய் இருந்த போது இலந்தை வடையை  அருமையாக பாக் செய்து விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். எல்‌ஆர் ஈஸ்வரி பாடிய " எயந்த பயம் எயந்த பயம் " பாட்டு ஞாபகம் வந்தது. இதன் தாவரவியல் பெயர் சிகிபஸ் ஜூ ஜூ பா , ரம்நாசியே குடும்பத்தையே சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் விபரங்கள் கொடுத்து உங்களை வெறுப்பேத்த விரும்ப வில்லை .

இலந்தை வடையை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்த இன்னொரு பாட்டு " எரியிலே இலந்த மரம் தங்கச்கி வச்ச மரம்...!" பாடல் தான். நான் ஒரு தீவிர எழுத்தாளர் சுஜாதா வாசகன் . அவர் எழுதிய ஒரு திரில்லர் நாவலை படமாக எடுத்த ஒரு படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்று உள்ளது. படத்தின் பெயர் " கரை எல்லாம் செண்பக பூ ". 

KaraiyellamShenbagapoo.jpg
சிறுவனாக இருக்கும் போதே வானொலியில் நான்கு கேட்ட பாடல் இது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் . கொஞ்சம் பெரியவன் ஆனதும் , சுஜாத்தாவின் "கரை எல்லாம் செண்பக பூ" நாவலை படிக்கும் போது அட இந்த தலைப்பில் ஒரு படம் இருக்குதே என்று பார்த்தால் , அவரின் நாவலை தான் படமாக எடுத்து இருந்தார்கள். நல்ல வேலை "ப்ரியா " படத்தை போல இப்படத்தை கந்தரகோலம் ஆக்க வில்லை . ஓரளவுக்கு நாவலில் இருப்பதை போன்றே எடுத்து இருந்தார்கள் . ஒரு சில மாற்றங்கள் தவிர. 
Download Here 


 Flim:Karaiyellam Shenbagapoo |Music:Maestro Illayaraja| Lyricist:Panchu Arunachalam | Singers : S. Janaki, Ilaiyaraaja & Chorus | Year : 1981

இந்த பாடலில் நாட்டுபுற பாடலும் , கிராமத்து இசையும் , மேற்கத்திய இசையும் கலந்து ஒரு கலவையாக இருக்கும். இளையராஜா எப்படி பாட்டு சொல்லி கொடுத்து பாடவைத்து இருப்பார் என்பதை இந்த பாட்டில் அறிந்து கொள்ளலாம் . அதனால் தான் பாட்டு எப்படி ஆரம்பம் ஆகிறது என்று தொடக்கத்தில் இருந்து கொடுத்து இருக்கிறேன் . ஹெட் போனில் கேட்டு பாருங்கள் . பாஸ் கிட்டார் எப்படி இசைக்கிறது என்று உற்று கேளுங்கள்.பின்னர் புரியும்,நாட்டுபுற பாட்டுக்கு வெஸ்ட்ர்ன் இசை எப்படி கலக்கிறது என்று .... இளையராஜாவின் அற்ப்புதமே அது தானே .

இப்படி ஒரு கிராமத்து பாடல்களின் பின்னனியில் ஒரு கிரைம் கதையை எழுதுங்கள் என்று இளையராஜா சுஜாத்தாவிடம் கேட்டு கொண்டதால் அவர் எழுதிய நாவல் தான் கரை எல்லாம் செண்பக பூ . ஆனந்த விகடனில் தொடராக வந்து உள்ளது . தொடருக்கு செம்ம வரவேற்பு .சுஜாத்தாவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று....

Tuesday, May 19, 2020

நினைவோ ஒரு பறவை

நினைவோ ஒரு பறவை

எனது பள்ளித் தோழி பரமேஸ்வரி அவர்களின் தம்பி திரு கல்கி கார்த்தி  (ஒரிஜினல் டிராக் ஆடியோ பாடல்கள் ) அவர்கள் அனுப்பிய இந்த இரங்கல் கட்டுரையை அப்படியே கொடுத்து இருக்கிறேன் .
புகைபடங்கள் நன்றி : Flute King கல்கி சரவணன் .

 திரையுலகால் மறக்கப்பட முடியாத கலைஞன் புருஷோத்தமன் 
(இரத்த புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன் சிகிச்சை பலன் இன்றி காலமானார்  )
1978 இல் ராஜா, கமல்ஹாசன் பாரதிராஜா பாக்யராஜின் இணைப்பில் உருவாகிய சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் பாடல்கள் எல்லாமே அருமையானவை.  இதிலே கமல் பாடிய "நினைவோ ஒரு பறவை" என்ற பாடல் உருவான கதை சுவராஸ்யமானது, அந்தக்காலகட்டத்தில் பிரபலமாகியிருந்த ஆங்கிலப்பாடலொன்றைக் கமல்ஹாசன் ஹம் பண்ணியதை எதேச்சையாகக் கேட்ட ராஜா அதே ஹம்மிங்கைப் போன்ற ஒன்றைச் சேர்த்து உருவாக்கிய பாடல்தான் நினைவோ ஒரு பறவை.

அதுமட்டுமல்லாமல். அந்தப்பாடலையும் மதிப்புக்குரிய ஜானகியுடன் சேர்த்து  கமலையே பாடவைத்திருப்பார் ராஜா. இந்தச் சுவையான சம்பவத்தை கமலும் ராஜாவும் சேர்ந்து பங்காற்றிய சில நிகழ்ச்சிகளிலும் கமல் நினைவுகூர்ந்து மகிழ்ந்திருப்பார். ஆனால் இந்தப்பாடலில் இன்னொரு விஷேடமும் அடங்கியுள்ளது அதை அந்தப்பாடல் ஒலிப்பதிவில் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் தவிர்த்து மற்றய எல்லோருமே அனேகமாக மறந்துவிட்டார்கள் அது என்னவென்றால் இந்தப்பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரோட்டோ ( Rototom ) என்ற புதியவகை ட்ரம்ஸ் உபயோகப்படுத்தப்பட்டது...பாடலின் இடையிசைகளைக் கேட்டுப் பாருங்கள் அதிலே மேலிருந்து கீழாக ஒரு ட்ரம்ஸ் ஒன்று ஒலிப்பதைக் கேட்கலாம் அதுதான் ரோட்டோ டிரம்ப்ஸ் .

இது உருவாக்கப்பட்டது அல்லது இசையுலகில் பயன்பாட்டுக்கு வந்தது 1968ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்து பழகி வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்.
( The Rototom is a drum developed by Al Payson, Robert Grass, and Michael Colgrass that has no shell and is tuned by rotating.[1][2] A rototom consists of a single head in a die-cast zinc or aluminum frame. Unlike most other drums, this type has a variable definite pitch. Composers are known to write for them as tuned instruments, demanding specific pitches. Rototoms are often used to extend the tom range of a standard drum kit. They were commercialized by the drumhead company Remo Inc., of North Hollywood, California.[3])



அந்தக் கலைஞன் அமரராகிவிட்டதை இப்போதுதான் அறிந்தேன் மிகுந்த வருத்தத்துடன் உடனே மனதில் தோன்றியதை எழுதி இதைப்பகிர்கிறேன்.

ராஜாவுடன் பல்லாண்டுகளாக தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிய மூத்த கலைஞர்களில் ஒருவர் இவர் . அவரின் எத்தனையோ பாடல்களில் அற்புதமாக இவரின் ட்ரம்ஸ் வாசிப்பைக் கேட்கலாம்,
  • "மேகம் கொட்டட்டும்"
  •  "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்"

Monday, May 18, 2020

தீர்த்த கரைதனிலே...செண்பக புஸ்பங்களே


போன பதிவில் ஜென்சி பாடின மலையாள பாட்டு பற்றியும் , தமிழ் பாடல்களுக்கு நடுவில் மலையாள பாடல் வரிகள் வந்து இருப்பதை பற்றி சொல்லி இருந்தேன் . நிறைய நண்பர்கள் ஜென்சி இப்படி ஒரு அழகான மலையாள பாடலை தமிழ் படத்தில் பாடி இருக்கிறாரா ? .... நல்லா இருக்கு என்றும்,சிலர் சிறு வயதில் ரேடியோவில் கேட்டதாக ஞாபகம் என்றும் சொல்லி இருந்தார்கள் .

அவர்களை சொல்லி குற்றம் இல்லை . ஜென்சி பாடியது அதிகபட்சமாக ஒரு முப்பது பாடல்கள் தான் இருக்கும். ( முடிந்தால் எல்லா பாடல்களையும் தேடி எடுத்து போடப்பார்க்கிறேன் )

ஜென்சி பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்கள் தாம். அவற்றில் ஒன்று தான் நாம் இப்போது பார்ப்பது. பாடல் இடம் பெற்ற படம் "தை பொங்கல்" இந்த படதில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்."பனி விழும் பூ நிலவில்" பாடலை பற்றி இங்கு பார்க்கவும் .

 "தீர்த்த கரைதனிலே.. " என்று பாரதியார் பாடல் வரிகளைக் கொண்டு தொடங்கும் இந்த பாடலை எழுதியது M.G.வல்லபன். 'தீர்த்த கரைதனிலே' யில் இரண்டு பாடல்கள் உண்டு . ஒன்று ஜேசுதாஸ் பாடியது , இன்னொன்று ஜென்சி பாடியது . இந்திய வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடலாகும்.அது சோகப்பாடல்.

ஆனால் ஜென்சி பாடியது டூயட் பாடல் ஆகும்.இரண்டு பாடல்களுக்கும் இடையிசையில் சிறிது வித்தியாசம் காட்டி இருப்பார் இளையராஜா. பாடல் வரிகளிலும் சிறிய வித்தியாசம் இருக்கும் .

அது என்னமோ தெரியவில்லை ஜென்சி பாடிய பாடலை இந்திய வானொலி நிலையங்கள் அதிகமாக ஒலிபரப்பவில்லை. ஆனால் இலங்கை வானொலி இதை அதிகம் ஒலிபரப்பியுள்ளது. அதே போல "கரும்பு வில்" என்ற படத்தில் "மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் " என்ற பாடல். அதிலும் KJ ஜேசுதாஸ் பாடிய பாடலை தான் இந்திய வானொலி நிலையங்கள் அதிகம் ஒலிபரப்பி உள்ளது. இப்பவும் அவர் பாடிய பாடலை தான் ஒலிபரப்புகிறார்கள். இந்த படத்தை போலவே கரும்பு வில் படத்திலும் அந்த பாடல் படத்தில் இடம்பெற்று இருக்கும்.

இதில் இந்த பாடலுக்கு ராதிகா பரத நாட்டியம் ஆடுவது போல ஆடியிருப்பார். தைய தக்கா என்று ஆடி இருப்பதை பார்க்க நன்றாக சிரிப்பு வரும் அதே போல் "கிழக்கே போகும் ரயில் " படத்தில் "மாஞ்சோலை கிளிதானோ" என்ற பாடலுக்கு ராதிகா பரதநாட்டியம் ஆடி இருப்பதை பார்த்தாலும் சிரிப்பு வரும்.

ஒரு அழகான பாட்டுக்கு எப்படி காட்சியமைப்பு அமைக்கக் கூடாது என்பதற்கு இந்தப் பாடலின் காட்சியமைபை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்ய Download Here 
ஜென்சி இந்தப் பாடலை மிக அனாசியமாக பாடி இருப்பார். ஓ ..ஓ.... ஓ.... என்று முதலில் அவர் பாடும் ஹம்மிங்க் முதலே நம்மை பாடலுக்குள் இழுத்து விட்டு இருப்பார். (யேசுதாஸ் பாடிய பாடலுக்கும் அதே ஹம்மிங்க் தான் ..... )

Flim :Thai Pongal|Music:Maestro Illayaraja| Lyricist:MG Vallaban | Singer:Jency | Year : 1980

"நாண... மேக வானிலே,நானும் நீயும் கூடியே..
மோக ராகம் பாடியே..போடும் காதல் நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய"

என்று ஏணி வைத்து ஏறி மேலே போய் ,

கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே

என்று இறங்கி வந்து

கொஞ்ச வா......

என்று கொஞ்சி முடித்து இருக்கும் மெட்டு , இளையராஜா அசத்தி இருப்பார் .

Sunday, May 10, 2020

ஞான் ஞான் பாடனும்....!

இப்படி ஒரு சிச்சுவேஷன் நினைத்துப் பாருங்கள் :

காதலி காதலனுக்கு தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறாள். அல்லது காதலன் தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறான்.

ஆனால் அந்தக் கடிதத்தை காதலனோ காதலியோ படிக்க முடிவதில்லை ஏனென்றால் அதில் எழுதி இருப்பது வேறொரு மொழியில்.
இப்பொழுது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு என்னவாக இருக்கும்.கடிதம் நினைதவரிடம் போய் சேர்ந்து அதனால் ஏற்படும் ஒரு துள்ளலும், மகிழ்ச்சியும்,அதேசமயம் கடிதத்தை அவர் படிக்க முடியாமல் போனதற்காக ஏற்படும் ஒருவிதமான சோகமும், அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஒருவிதமான ஏக்கமும் ஏற்படும். ஒரு விதமான கையறு நிலை.

இதை எழுத்தில் மிக எளிதாக எழுதி விடலாம் ஆனால் அதை நாம் இசையில் தருவது மிகவும் சவாலான ஒரு பணியாகும்.

இந்த முதலாவது interlude யை , கேட்டுப்பாருங்கள்.



இதில் முதலில் வரும் லீட் கிடார் இசையும் , கீ போர்டுடன் கூடிய குக்கு குக்கூ குயில் போன்ற புல்லாங்குழல் இசையும் அந்த துள்ளலை காட்டி இருக்கும். அதற்கு அடுத்து வரும் புல்லாங்குழல் இசையும், சோலோ வயலினும் ஒரு மென்மையான சோகத்தை உணர செய்திருக்கும். இசை ஞானி இளையராஜாவை தவிர இப்படி உண்ர்வுகளை யாரும் கொடுக்க முடியாது . 

இரண்டாவது interlude யை கேட்டுப்பாருங்கள்



இது அப்படியே முதலாவது Interlude யை வேறொரு தாள கட்டுகளில் காட்டி இருக்கும்.

இந்த பாடல் இடம் பெற்ற படம் "பூந்தளிர்" ,1979 களில் வெளிவந்த படம். இதில் சிவகுமார் ஒரு ஓவியர் ,சுஜாதாவிற்கு காதல் கடிதம் எழுதி இருப்பார் ஆனால் அந்த கடிதத்தை சுஜாதாவால் படிக்க முடியாது ஏனெனில் அவர் ஒரு மலையாளப் பெண்ணாக நடித்து இருப்பார்.பாடல்களில் அதை படித்துக் காட்டச் சொல்லி ஒரு தமிழ் பெண்ணிடம் கேட்பாள் அவள் எனக்கு வளையலும் புடவையும் வாங்கித் தந்தால்தான் படித்துக் காட்டுவேன் என்று லஞ்சம் கேட்பாள். 

முதல் இடை இசை முடிந்தவுடன், " மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் அதிசயம் " என்று ஜென்சி பாடலை பாடியிருப்பார். பாடல் மெதுவாக ஆரம்பித்து ஹை பிட்சில் முடிவது போல இருக்கும் , பிசிறு தட்டாமல் தனது இனிமையான குரலில் ஜென்சி மயக்கி இருப்பார். வரிகளின் அர்த்தங்கள் புரியாமல் போனாலும் , அதன் உணர்வுகளை நாம் நன்றாக உணர முடியும் . பாடலில் ஒரு துள்ளல், அதே சமயம் ஒரு சோகமான ஏக்கம் கலந்து இருக்கும். 5 வயது தான் இருக்கும் அப்போது எனக்கு, ஆனாலும் இந்த பாடல் வானொலியில் கேட்கும் போது அந்த வயதிலும் ஜென்சியின் குரல் என்னை கட்டி போட்டது .  அவர் தமிழ் படங்களில் படியாது மொத்தம் 25 இல் இருந்து 30 தான் இருக்கும் . அதில் இதுவும் ஒன்று.
  Flim :Poonthalir |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:Jency | Year : 1979
பதிவிறக்கம் செய்ய Download Here 
  அன்றைய காலகட்டங்களில் இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்ப கேட்டு இருந்திருக்கிறேன் . ஆனால் இந்திய வானொலிகளில் இந்தப் பாடல் மிகவும் குறைவாகவே ஒலிபரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தில் இருந்த மற்ற பாடல்கள் "வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தள்ளாடுது" , " ராஜா சின்ன ராஜா " " மனதில் என்ன நினைவுகள்ளோ" ,போன்ற பாடல்கள் இந்தப் பாடலை மறைத்துவிட்டு இருந்தன.
பாடல் வரிகள் :
ஞான் ஞான் பாடணும் ஊஞ்சால் ஆடனும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவனும்
பூன்னெழில் கோமளம் தென் தெங்கில் தோரணம்
பனிலே தேனிலே இதிலே இதிலே .... ஞான் ஞான் பாடணும்

மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் ரகசியம்
கூவுன ராகங்கள் புரியாத அதிசயம்பூந்தென்றல் காற்றிலே புஷ்பபாண அபிநயம்
மானாட பிரமையே மனதங்கில் சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ..... ஞான் ஞான் பாடணும்


பூந்தளிர் ஆடும் போல் தாளிரிடும் ஸ்வாஸங்கள்
பைங்கிளி ஆடும் போல் பரவச தாளங்கள்
பிரஹ்ருதியில் கவிதைகள் எழுதிய ஈஸ்வரன்
பலமுற பிபாடிடும் இலவேனில் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ......ஞான் ஞான் பாடணும்