Search This Blog

Pages

Sunday, June 28, 2020

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

எண்பதுகளில் இசை ஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த நேரத்தில் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களும் இளையராஜா பாடல்களை போன்றே தோற்றம் பெற்று பிரபலமாக ஹிட் கொடுத்து கொண்டு இருந்தது. இப்படியாகப்பட்ட ஒரு பாடலை இப்போது பார்ப்போம்.

நான் தினமணி பேப்பர் வாங்குகிறேன். என்னடா பாட்டு பற்றின பதிவில் செய்தி தாளைப் பற்றி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பேப்பரில் தமிழ்மணி என்ற ஒரு பகுதி முழு பக்கத்திற்கு வரும். அந்தப் பகுதிகளில் தமிழ் இலக்கியங்களைப் பற்றி தமிழ் பாடல்களைப் பற்றி நிறைய கட்டுரைகள் தமிழ் அறிஞர்கள் எழுதி இருப்பார்கள்.அதில், ஒரு பாடலில் தலைவன் பொருள் தேடி வெளியூருக்கு சென்று இருக்கும்பொழுது தலைவி அவனை நினைத்து தனது தோழியை தூது விடுவதாக அமைந்த ஒரு பாடலை பற்றி போட்டிருந்தார்கள்.

தமிழ் சிற்றிலக்கியங்களில் தூது இலக்கியம் என்று ஒரு தனி வகை உண்டு. காக்கை விடு, நாரை விடு தூது, அன்னம் விடு தூது ,தமிழ் விடு தூது, நெஞ்சு விடு தூது .....என்று நிறைய உண்டு . பொதுவாக மனிதர்களையும், அஃறிணை வகைகளையும் பயன்படுத்தி தூது பாடல்கள் அமைந்து இருக்கும்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் நளவெண்பாவில் அன்னம் விடு தூதுவை எங்களது தமிழ் விரிவுரையாளர்,(கண்ணம் மறைக்கும் அளவிற்கு வீரப்பன் மீசையுடன் பயங்கரமாக காட்சி அளிப்பார் , மீசைக்காரர் என்றே பட்டப் பெயர் வைத்திருந்தோம் ) அன்னம் நளனுக்கு தமயந்தி பற்றின அழகை விவரிப்பதை அவ்வளவு அருமையாக விளக்கி னார். இன்னொரு விரிவுரையாளர் பாடியே காட்டுவார் . நம்ம தமிழ் புலவர்கள் எவ்வளவு கற்பனை வளத்துடன் பாட்டு எழுதி இருக்கிறார்கள் என்று ஆச்சிரியப்பட்டேன். தூது இலக்கியத்திற்கு கலிவெண்பா என்ற வகை தான் சிறந்தது என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. ( யாப்பு இலக்கணம் நேர் நேர் நிரை மா , நிரை நேர் புளிமா , என்று படித்தது ஞாபகம் வருகிறதா நண்பர்களே....)

இப்படியாக தூதுவிடும் பாடல்கள் தமிழ் திரைப்பாடல்களில் நிறைய இருக்கிறது.

  • பச்சை விளக்கு படத்தில் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்று தோழியை தூது விடுகிறார் கவிஞசர் கண்ணதாசன்
  • "பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ" படகோட்டி படத்தில் கவிஞசர் வாலி வெள்ளலையை தூது விட்டு இருப்பார்,
 எங்கம்மா சபதம் படத்தில் வரும் "அன்பு மேகமே இங்கு ஒடி வா " என்ற பாடலில் மேகம் தூது ஆக வரும், 16 வயதினிலே படத்தில் வரும் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலில் பாடலாசிரியர் கங்கை அமரன்
  • "தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்" என்று தென்றலையும்  
  • "நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!வண்ணப் பூவே! தென்றல் காற்றே!என்னைத் தேடி சுகம் வருமோ?"  என்று காற்று, மயில், குயில் என்று தூதாக அனுப்பி இருப்பார்.
அவரே பின்னர் கிழக்கே போகும் ரயிலில் 'பூவரசம்பூ பூத்தாசு , பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ' என்ற பாடலில்
  • "தூது போ ரயிலே ரயிலே ,துடிக்குது ஒரு குயிலே குயிலே " என்று ரயிலை தூதாக அனுப்பி இருப்பார்.
பாடலாசிரியர் தாமரை அவர்கள், ‘காக்க காக்க’ திரைப்படத்தில்
  • "தூது வருமா, தூது வருமா, காற்றில் வருமா ,கரைந்து விடுமா கனவில் வருமா ,கலைந்து விடுமா" என்று கேட்டு இருப்பார் .
Achamillai Achamillai
நாட்டுப்புற பாடல்களில் தூது பாடல்கள் உண்டு. எங்கள் கிராமத்து தோட்டத்தில் பெண்கள் பாடி கொண்டே கரும்பு நடவும் போது, அடுத்த பாத்தியில் கரும்பு நடவும் ஆண்கள் பதில் சொல்லுவது போன்று அதே ராகத்தில் திருப்பி பாடுவதை சிறுவனாக வேடிக்கை பார்த்து இருந்து இருக்கிறேன்.கேள்வி பதில் போல எச பாட்டாகவும் இருக்கும்.அப்படியான ஒரு நாட்டு புற தூது பாட்டு தான்  "ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த," பாடல் . இதில் நீர் அருவி தூது பொருளாக அமைகிறது . 

இளைய ராஜா ஒரு முறை தனது வயலின் இசைக்கலைஞர் ஒருவரை பற்றி கூறும் போது, இவர் என்னை விட திறமை மிக்கவர் என்று சொன்னதினால் , K பாலச்சந்தர், தனது அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் அவரை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். அவர் பெயர் வி‌.எஸ். நரசிம்மன். அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் , அதில் இரண்டு பாடல்கள் செம்ம ஹிட். " ஆவாரம் பூவு ஆறேழு நாளா" " ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த" என்ற பாடல்கள்.இரண்டு பாடல்களையும் அப்போது வானொலியில் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.
https://www.youtube.com/watch?v=5WKPapEz6FI&feature=emb_err_woyt

பாடல்களில் வரும் தபேலா,மத்தளம், கிதார், ஆகியவற்றின் இசை கோர்வைகள், interlude இசைகள் அப்படியே இளையராஜாவை போன்றே இருக்கும். நன்கு உற்று கேட்டால் depth, tempo வில் உள்ள வித்தியாசங்கள் புரிய வரும்.

மேகத்த தூது விட்டால் , திசை மாறி போகும் என்று , தண்ணீரை தூது விடுகிறாள் காதலி. கூடவே முத்ததையும் அனுப்பி, எப்போ வந்து திருப்பி எண்ணிக்கை குறையாமல் தர போகிறாய் என்று கேட்கிறாள்....

"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"

பேச்சு வழக்கில் எழுதப்பட்ட பாடல், (நாட்டு புற பாட்டு போன்று....) . நிறைய பேர் இது இளையராஜா இசை அமைத்த பாடல் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பார்கள்.

 (80/90 களில் தற்போது உள்ளது போன்று வாட்ஸ் ஆப் , பேஸ்புக் , செல் ஃபோன் என்று வசதிகள் கிடையது . அன்றைய காலகட்டத்தில் தனது காதலை கடிதம் மூலமாகவோ, வாழ்த்து அட்டை மூலமாகவோ , நண்பர்கள் மூலமாகவோ , அல்லது மனசின் எண்ணத்தியே தூதாக அனுப்பிவிட்டு சேர்ந்துசோ ,சேரலையோ என்று இப்பாடலில் வரும் கதாநாயகியை போன்று தவித்து கொண்டு இருந்தது ஞாபகம் வரும், இப்பாடலை கேட்கும் 80's/90 கிட்ஸ்களுக்கு, அதுவும் பெண்களுக்கு ...!)

பின் குறிப்பு :
"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த , சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"என்கிற வரிகள் 'பிள்ளைக் கணியமுது '  என்ற பழைய படத்தில் கூட வரும் . வைரமுத்து ஒரு இன்ஸ் பிரேசன்க்காக எடுத்து இருப்பாரோ.....?

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி,
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி"
என்ற பாடலின் வரிகள் கூட நளவெண்பாவில், அன்னம் தமயந்தியின் அழகை விவரிக்கும் பகுதி தான்...... !
பாடல் வரிகள் :

Sunday, June 14, 2020

என் இனிய பொன் நிலாவே

"என் இனிய பொன் நிலாவே" பிரபலமான இந்த பாடல் மூடு பனி  என்ற படத்தில் 1980 நவம்பர் 6 அன்று தீபாவளி அன்று ரிலீஸ் ஆகியது .  மற்ற தீபாவளி வெளியீடுகளான 'நிழல்கள்'  மற்றும் மற்றொரு பிரதாப் போத்தன்  படமான 'வறுமையின் நிறம் சிகப்பு'   ஆகியவற்றின்  போட்டியை எதிர்கொண்ட போதிலும், இந்த படம் வணிக ரீதியாக வெற்றிகரமாக இருந்தது, 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இளையராஜாவின் நூறாவது படம் .  எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய "இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலை தழுவி எடுத்த படம் தான் மூடு பனி . பாலு மகேந்திராவே  40 % இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலையும் , 60% தி கலெக்டர் என்ற நாவலயும்  அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட படம் என்று சொல்லி உள்ளார்.
இனி இந்த படத்தில் இருக்கும் மூடு பனி விஷயங்கள் : 
  •  மூடு பனியின் பின்னணி ஸ்கோர் செய்யும் போது, ​​இளையராஜா தனது பழைய கீ போர்ட்  புரோகிராமரை அவருடைய குடிப்பழக்கத்தின் காரணமாக  நீக்கிவிட்டார். அப்போது மலையாள படங்களுக்கு கீ போர்ட் ப்ரோக்ராம்மிங்க் செய்து கொண்டிருந்த 13 வயது திலீப் என்ற கீ போர்ட் ப்ரோக்ராம்மரை பற்றி சொல்ல, இளையராஜாவின் மேற்பார்வையின் கீழ் திலீப், அவர் வாசிக்க வேண்டிய குறிப்புகள் மற்றும் பின்னணி இசையை  வெற்றிகரமாக வாசித்து முடித்தார். முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்த இந்த திலீப் தான் இப்போது "ஏ‌ஆர் ரஹ்மான்" ஆக அறியப்படுகிறார் .
  •  தனது கோகிலா என்ற முதல் படத்தில் நடிகர் மோகனை  அறிமுகபடுத்திய பாலு இந்த படத்திலும்  கோகிலா மோகன் என்று டைட்டில் போட்டு ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்து இருப்பார். பின்னர் அவர் மைக் மோகன் ஆன கதை வேறு . 
  •  இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.  படத்தின் நாயகன் கிதார் வாசித்து பாடுவது போன்ற ஒரு காட்சி . படத்தின் கிளைமாக்ஸ்க்கு முன்னர் வரும் "என் இனிய பொன் நிலாவே" பாடல் அது .இது நாட்ட பைரவி ராகத்தில் அமைந்தது , கங்கை அமரனின் கூற்று படி மூடு பனியில் உள்ள பாடல்களில் மிக கடினமான பாடல் ஆகும் . அந்த  பாடலுக்கு ட்யூன் போடும் போது முதலில் போட்டது " இளைய நிலா ஒளிகிறதே " ட்யூன் . அது பாலுவுக்கு திருப்ப்தியாக அமையவில்லை . வேறொரு ட்யூன் கேட்க்கவே அதற்க்கு அமைந்தது தான் இந்த 'என் இனிய பொன் நிலாவே' . பின்னாளில் 1982 இல் பயணங்கள் முடிவது இல்லை படத்தில்  இளைய நிலா ஒளிகிறதே ட்யூன் சரித்திரம் படைத்தது .   
Flim:Moodu Pani  |Music:Maestro Illayaraja| Lyricist:Gangai Amaran | Singers : K.J.Jesudas | Year : 1980

Download Here HQ Audio Improvised
பாலு மகேந்திரா தனது முதல் படத்துக்கு இளையராஜாவை தான் இசை அமைக்க ஆசைப்பட்டார். அதை பற்றி அவர் தனது வலை பூவில் எழுதி இருப்பதை அப்படியே கொடுத்து உள்ளேன் .

 // அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். 

Tuesday, June 2, 2020

இசை ஞானி இளையராஜா பிறந்த நாள் ....!

இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாள். அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அதை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
நேற்று இளையராஜாவின் ஆபீஷியல் யு  டூபிள் திகட்டத் திகட்ட அத்தனை பாடல்கள் லைவ் ஸ்ட்ரீமிங் இல் அனுபவித்தேன். அப்பொழுது ஏற்பட்ட கலவையான உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே கிடையாது ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு நினைவுகளை தூண்டியது. குழந்தைப் பருவத்தில் இருந்து இப்போது வரை வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவரது பாடல்களைக் கொண்டுஎன்னுடைய வாழ்கையின்  நினைவுகளை தொடர்புபடுத்த முடிகிறது.

இளையராஜா இசை காலம் கடந்து நிற்கும் ஒரு இசை ஆகும். தமிழ் நண்பர்கள் அவர் வேறு மொழியில் இசையமைத்த பாடல்களை கேட்டு இருக்கேன் அவ்வளவாக வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் நான் அப்படியல்ல தேடித் தேடி வேறு மொழிகளிலும் அவர் இசையமைத்த பாடல்களை கேட்டது உண்டு.

அப்படி ஒரு பாட்டு இங்கே. Techno வகையில் இசைக்கப்பட்டது. இதன் தமிழ் வடிவம் இந்திய இசை கருவிகளை கொண்டு வாசிக்க பட்டு இருக்கும். சிறப்பு அம்சம் தனுஷ் இந்த படத்தில் அட்டகாசமாக நடித்து இருப்பார். ஹிந்தி நடிகர்களுக்கு கொஞ்சம் கிலியை ஏற்படுத்தினார் என்றாள் மிகை அல்ல ..... ! இப்படதிர்க்கு இசை இசை ஞானி இளையராஜா தான் ......! பாடியது கமல்ஹாசன் பொண்ணு ஸ்ருதி ஹாசன் , நடனம் ஆடுவது இன்னொரு கமலின் பெண் அக்ஸ்ஹர ஹாசன் ....!

வீடியோ பிளே ஆகவில்லை எனில் யு டுபில்  பார்த்து விட்டு சொல்லவும்
https://www.youtube.com/watch?v=o0PFiyuhRz4



இந்தப் பாடலின் தமிழ் பாடல் என்ன என்று என்பதை சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேரு மோதிரம் குலுக்கல் முறையில் உங்களை குலுக்கி சாரி உங்கள் பெயர்களை குலுக்கி வழங்கப்படும் ,போஸ்டல்சார்ஜ் தனி .... 🙏( போஸ்டல் சார்ஜை எனது அக்கவுண்டில் செலுத்தவும் )

கமன்ட் lலிங்கை கிளிக் செய்து கமெண்ட் செய்யவும்....அனானிமஸ் ஆக கூட கமண்ட் செயலாம் .....!