"என் இனிய பொன் நிலாவே" பிரபலமான இந்த பாடல் மூடு பனி என்ற படத்தில் 1980 நவம்பர் 6 அன்று தீபாவளி அன்று ரிலீஸ் ஆகியது . மற்ற தீபாவளி வெளியீடுகளான 'நிழல்கள்' மற்றும் மற்றொரு பிரதாப் போத்தன் படமான 'வறுமையின் நிறம் சிகப்பு' ஆகியவற்றின் போட்டியை எதிர்கொண்ட போதிலும், இந்த படம் வணிக ரீதியாக வெற்றிகரமாக இருந்தது, 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இளையராஜாவின் நூறாவது படம் . எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய "இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலை தழுவி எடுத்த படம் தான் மூடு பனி . பாலு மகேந்திராவே 40 % இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலையும் , 60% தி கலெக்டர் என்ற நாவலயும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட படம் என்று சொல்லி உள்ளார்.
இனி இந்த படத்தில் இருக்கும் மூடு பனி விஷயங்கள் :
- மூடு பனியின் பின்னணி ஸ்கோர் செய்யும் போது, இளையராஜா தனது பழைய கீ போர்ட் புரோகிராமரை அவருடைய குடிப்பழக்கத்தின் காரணமாக நீக்கிவிட்டார். அப்போது மலையாள படங்களுக்கு கீ போர்ட் ப்ரோக்ராம்மிங்க் செய்து கொண்டிருந்த 13 வயது திலீப் என்ற கீ போர்ட் ப்ரோக்ராம்மரை பற்றி சொல்ல, இளையராஜாவின் மேற்பார்வையின் கீழ் திலீப், அவர் வாசிக்க வேண்டிய குறிப்புகள் மற்றும் பின்னணி இசையை வெற்றிகரமாக வாசித்து முடித்தார். முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்த இந்த திலீப் தான் இப்போது "ஏஆர் ரஹ்மான்" ஆக அறியப்படுகிறார் .
- தனது கோகிலா என்ற முதல் படத்தில் நடிகர் மோகனை அறிமுகபடுத்திய பாலு இந்த படத்திலும் கோகிலா மோகன் என்று டைட்டில் போட்டு ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்து இருப்பார். பின்னர் அவர் மைக் மோகன் ஆன கதை வேறு .
- இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். படத்தின் நாயகன் கிதார் வாசித்து பாடுவது போன்ற ஒரு காட்சி . படத்தின் கிளைமாக்ஸ்க்கு முன்னர் வரும் "என் இனிய பொன் நிலாவே" பாடல் அது .இது நாட்ட பைரவி ராகத்தில் அமைந்தது , கங்கை அமரனின் கூற்று படி மூடு பனியில் உள்ள பாடல்களில் மிக கடினமான பாடல் ஆகும் . அந்த பாடலுக்கு ட்யூன் போடும் போது முதலில் போட்டது " இளைய நிலா ஒளிகிறதே " ட்யூன் . அது பாலுவுக்கு திருப்ப்தியாக அமையவில்லை . வேறொரு ட்யூன் கேட்க்கவே அதற்க்கு அமைந்தது தான் இந்த 'என் இனிய பொன் நிலாவே' . பின்னாளில் 1982 இல் பயணங்கள் முடிவது இல்லை படத்தில் இளைய நிலா ஒளிகிறதே ட்யூன் சரித்திரம் படைத்தது .
Download Here HQ Audio Improvised
பாலு மகேந்திரா தனது முதல் படத்துக்கு இளையராஜாவை தான் இசை அமைக்க ஆசைப்பட்டார். அதை பற்றி அவர் தனது வலை பூவில் எழுதி இருப்பதை அப்படியே கொடுத்து உள்ளேன் .
பாலு மகேந்திரா தனது முதல் படத்துக்கு இளையராஜாவை தான் இசை அமைக்க ஆசைப்பட்டார். அதை பற்றி அவர் தனது வலை பூவில் எழுதி இருப்பதை அப்படியே கொடுத்து உள்ளேன் .
// அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
இசையமைப்பளர் ஜி.கே.வெங்கடேசுடன்,கம்போசிங் உதவியாளராக தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டு வருவான். அவன் பெயர் இளையராஜா . நான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் மியூசிக் கம்போசிங், டான்ஸ் ரிகர்ஸல் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்கெல்லாம் நான் போய் உட்காருவது வழக்கம். அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது.
நான் பூனே திரைப்படப் பள்ளியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலோ, அல்லது எனது ஒளிப்பதிவின் நேர்த்தியால் கவரப்பட்டதாலோ,இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறையப் பேசுவார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நிறையப் பேசுவோம். நேரம் போவது தெரியாமல் பேசுவோம். என்றோ ஒருநாள், தான் இசையமைக்கப் போகும் தனது முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார்.

சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதற் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக்காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது. நான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். எனது எண்ணத்தை ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அது கேட்ட ஜி.கே.வெங்கடேஷ் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன..
" பாலு. இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க... அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான். "
அப்படியே தான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் வந்த "அன்னக்கிளி" படத்தின் மூலம் இளையராஜா என்ற மேதையை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றியீட்டின. அன்னக்கிளி படத்திற்குப் பின் ராஜாவுக்கு உட்கார நேரமில்லாது தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். வெற்றி மேல் வெற்றி. தங்களுடைய மண்ணின் இசையை, தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்து கொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.
பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969.செம்மீன் புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார்.வருடம் 1971. நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின் மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். " பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்".இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான "கோகிலா"வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976.எனது முதற் படத்தின் இசையமைப்பாளராக எனது நண்பர் இளையராஜாவைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்.

கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் " அழியாத கோலங்கள் ". தமிழ்ப்படம். இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்டமுடியவில்லை. 78-ல் நான் இயக்கிய எனது மூன்றாவது படம் " மூடுபனி ". இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக் கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். மூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த "அது ஒரு கனாக்காலம்" வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். //
பாடல் வரிகள் :
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என்னாசை உன்னோரமே
வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே…
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்
அன்பே…
இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
இனிய பொன் நிலாவேபொன் நிலவில் என் கனாவே
" என் இனிய பொன் நிலாவே "

No comments:
Post a Comment