"நீங்கள் கேட்டவை" இந்த வரிகள் இளைய தலைமுறைக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத வரிகள் எழுபதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரை இந்த நீங்கள் கேட்டவை என்ற ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரபலம் இப்பொழுதும் கூட நேயர் விருப்பம் மற்றும் இன்னும் பல பெயர்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நான் ஒரு தீவிர ரேடியோ ரசிகன் காலை “வந்தே மாதரம்” என ஆரம்பித்து இரவில் “மீண்டும் எங்கள் ஒலிபரப்பு நாளைக் காலை 6 மணிக்கு” என்ற அறிவிப்பு வரை ரேடியோ கேட்டவன் .
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் ஸ்தாபனம் ஆசிய சபை, திருச்சி வானொலி நிலையம் கோவை வானொலி நிலையம் சென்னை வானொலி நிலையம் ஆகியவற்றில் நேயர் விருப்ப உறுப்பினர் நான். இன்லேண்ட் மற்றும் போஸ்ட் கார்டில் பிடித்த பாடலை எழுதி அனுப்பி “ இந்தப் பாடலை விரும்பி கேட்டுள்ள நேயர்கள் “ மல்லிபாளையத்தில் இருந்து அருள் , சூலூரில் இருந்து ரமேஷ் ” என்று பெயருடன் ஒளிபரப்பாகும் போது அடையும் சந்தோசமே தனி தான். இந்தப்பதிவில் நான் ரசித்த ரேடியோ பாடல்களின் தொகுப்பை பதிவிட உள்ளேன்.

No comments:
Post a Comment