Search This Blog

Pages

Sunday, April 28, 2019

முரண் பாடல்

நான் ஸ்ரீநகரில் நண்பரிடம்பேசிக்கொண்டுஇருக்கும்போது " அவன் போகாத ஊருக்கு வழி கேக்குறான் " என்று சொன்னார்.நல்ல எதிர்மறையான உவமை என்றேன்.

" இதுல என்ன அருள் இருக்கு....சாதாரண வாக்கியம் தானே " ன்னு சொன்னார்.

" என்ன இப்படி சொல்லிட்ட , இப்படி 180 டிகிரி ஆப்போஸிட் ஆனா வாக்கியத வச்சு ஒருத்தர் பூந்து விளயாடி இருக்கார் ...தெரியுமோ ? "

" யார் அது , என்ன பண்ணினார் ....? நண்பர் .

" நீ, எங்கையாவது வானத்தில சிறகு இழந்த பறவைய பார்த்திறிக்கியா ...? "

"அது எப்படி ரெக்க இல்லாம பறவ பறக்கும்....? சின்ன புள்ள தனம்மா இல்ல இருக்கு நீ சொல்லுறது ..."

" இதுக்கே இப்படினா, இரவு நேர பூபாளம், மேற்கில் தோன்றும் உதயம்,குழந்தை பாடும் தாலாட்டு....இப்படி எதிர்மறை பொருளை கொண்டு ஒரு பாட்டே இருக்கு தெரியுமா ?"

"அப்படியா ...? யாருப்பா அது  ?"

" வேற யாரு நம்ம அடுக்கு மொழி கில்லாடி டி ராஜேந்திர் தான் . அவர் தமிழ்ல எம்‌. ஏ பட்டதாரி ... அவர் தான் இந்த பாடல எழுதி இசையும் இசைத்து இருக்கார் . கதை , திரைக்கதை ,வசனம் , இசை , ஒலி , ஒளி என்று எல்லா விசயங்களையும் ஒரே ஆளாக செய்யக்கூடியவர்களில் ஒருத்தர் டி‌ஆர்‌ , திறமையான ஆசாமி .....  ( இன்னொருத்தார் கே பாக்கியராஜ் ) "

"அட .... எங்க கொஞ்சம் அந்த பாட்ட பாடி காட்டு பார்க்கலாம் ...."( பாடி காட்டினேன் )

பதிவிறக்கம் செய்ய Download Here


இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் எல்லாம் நடை முறையில் சாத்தியமில்லாத ஒன்று . முரண்பாடான‌ பொருளை கொண்டு இப்பாடலை கதா  நாயகன் பாடுவதாக அமைந்து இருக்கும் . எல்லா முரண் பட்ட வரிகளையும் பாடி விட்டு கடைசியில் முத்தாய்ப்பாக

"ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது" என்று முடிந்து இருக்கும் .S P B சார் சும்மா நச்சுன்னு பாடி இருப்பார். இப்பாடலில் வீணையை டி ஆர் பயன்படுத்தி இருப்பார் பாருங்க ....அடிச்சுக்க முடியாது . வீணையை வச்சு இப்படி இசை அமைக்க முடியும்மா னு வியக்க வச்சுட்டார் . இந்த பாடலை நன்றாக உற்று கேட்டால் அவ்வளவாக இசை வாத்தியங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிய வரும் . வீணையை வைத்து அவர் இசை அமைத்த இன்னொரு சூப்பர் ஹிட் பாடலை பற்றி அடுத்த வரும் பதிப்புகளில் சொல்லறேன் .

Flim : Oru Thalai Ragam Music: T R Rajendar | Lyricist: T R Rajendar | Singer:S P Balasubramaniyam Year : 1980 



இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்


நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்

Saturday, April 27, 2019

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

முதல் பதிப்பாக “ஜனனி ஜனனி” என்ற பாடல். இது 1982 ல் வெளியான  “தாய்மூகாம்பிகை” என்ற படத்தில் வருகிறது. இந்த பாடல் உருவான விதம் பற்றி ஜெயா டி‌வியில் இளயராஜாவே கூறிய வீடியோ, காப்பி ரைட் காரணமாக you tube இல் இருந்து நீக்கி விட்டார்கள். ஆனால் அதன் பதிப்பை இசை ஞானி பக்தர்கள் என்ற வலை பூவில் உள்ளதை அப்படியே மிக்க நன்றியுடன் கொடுத்துள்ளேன்,


"ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் ":
 “ டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய்மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.