எண்பதுகளில் இசை ஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த நேரத்தில் பிற
இசையமைப்பாளர்களின் பாடல்களும் இளையராஜா பாடல்களை போன்றே தோற்றம் பெற்று
பிரபலமாக ஹிட் கொடுத்து கொண்டு இருந்தது. இப்படியாகப்பட்ட ஒரு பாடலை இப்போது பார்ப்போம்.
நான்
தினமணி பேப்பர் வாங்குகிறேன். என்னடா பாட்டு பற்றின பதிவில் செய்தி
தாளைப் பற்றி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.ஞாயிற்றுக்கிழமைகளில்
தினமணி பேப்பரில் தமிழ்மணி என்ற ஒரு பகுதி முழு பக்கத்திற்கு வரும். அந்தப்
பகுதிகளில் தமிழ் இலக்கியங்களைப் பற்றி தமிழ் பாடல்களைப் பற்றி நிறைய
கட்டுரைகள் தமிழ் அறிஞர்கள் எழுதி இருப்பார்கள்.அதில், ஒரு
பாடலில் தலைவன் பொருள் தேடி வெளியூருக்கு சென்று இருக்கும்பொழுது தலைவி
அவனை நினைத்து தனது தோழியை தூது விடுவதாக அமைந்த ஒரு பாடலை பற்றி
போட்டிருந்தார்கள்.
தமிழ் சிற்றிலக்கியங்களில் தூது இலக்கியம் என்று ஒரு தனி வகை உண்டு. காக்கை விடு, நாரை விடு தூது, அன்னம் விடு தூது ,தமிழ் விடு தூது, நெஞ்சு விடு தூது .....என்று நிறைய உண்டு . பொதுவாக மனிதர்களையும், அஃறிணை வகைகளையும் பயன்படுத்தி தூது பாடல்கள் அமைந்து இருக்கும்.
நான் கல்லூரியில் படித்த
காலத்தில் நளவெண்பாவில் அன்னம் விடு தூதுவை எங்களது தமிழ்
விரிவுரையாளர்,(கண்ணம் மறைக்கும் அளவிற்கு வீரப்பன் மீசையுடன் பயங்கரமாக
காட்சி அளிப்பார் , மீசைக்காரர் என்றே பட்டப் பெயர் வைத்திருந்தோம் )
அன்னம் நளனுக்கு தமயந்தி பற்றின அழகை விவரிப்பதை அவ்வளவு அருமையாக விளக்கி
னார். இன்னொரு விரிவுரையாளர் பாடியே காட்டுவார் . நம்ம
தமிழ் புலவர்கள் எவ்வளவு கற்பனை வளத்துடன் பாட்டு எழுதி இருக்கிறார்கள் என்று ஆச்சிரியப்பட்டேன். தூது
இலக்கியத்திற்கு கலிவெண்பா என்ற வகை தான் சிறந்தது என்று கூறியிருந்தது
நினைவுக்கு வருகிறது. ( யாப்பு இலக்கணம் நேர் நேர் நிரை மா , நிரை நேர்
புளிமா , என்று படித்தது ஞாபகம் வருகிறதா நண்பர்களே....)
இப்படியாக தூதுவிடும் பாடல்கள் தமிழ் திரைப்பாடல்களில் நிறைய இருக்கிறது.
- பச்சை விளக்கு படத்தில் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்று தோழியை தூது விடுகிறார் கவிஞசர் கண்ணதாசன்
- "பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ" படகோட்டி படத்தில் கவிஞசர் வாலி வெள்ளலையை தூது விட்டு இருப்பார்,
எங்கம்மா சபதம் படத்தில் வரும் "அன்பு மேகமே இங்கு ஒடி வா " என்ற பாடலில் மேகம் தூது ஆக வரும், 16 வயதினிலே படத்தில் வரும் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலில் பாடலாசிரியர் கங்கை அமரன்
- "தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்" என்று தென்றலையும்
- "நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!வண்ணப் பூவே! தென்றல் காற்றே!என்னைத் தேடி சுகம் வருமோ?" என்று காற்று, மயில், குயில் என்று தூதாக அனுப்பி இருப்பார்.
அவரே
பின்னர் கிழக்கே போகும் ரயிலில் 'பூவரசம்பூ பூத்தாசு , பொண்ணுக்கு சேதி
வந்தாச்சு ' என்ற பாடலில்
- "தூது போ ரயிலே ரயிலே ,துடிக்குது ஒரு குயிலே குயிலே " என்று ரயிலை தூதாக அனுப்பி இருப்பார்.
பாடலாசிரியர் தாமரை அவர்கள், ‘காக்க காக்க’ திரைப்படத்தில்
- "தூது வருமா, தூது வருமா, காற்றில் வருமா ,கரைந்து விடுமா கனவில் வருமா ,கலைந்து விடுமா" என்று கேட்டு இருப்பார் .

நாட்டுப்புற
பாடல்களில் தூது பாடல்கள் உண்டு. எங்கள் கிராமத்து தோட்டத்தில் பெண்கள் பாடி
கொண்டே கரும்பு நடவும் போது, அடுத்த பாத்தியில் கரும்பு நடவும் ஆண்கள் பதில்
சொல்லுவது போன்று அதே ராகத்தில் திருப்பி பாடுவதை சிறுவனாக
வேடிக்கை பார்த்து இருந்து இருக்கிறேன்.கேள்வி பதில் போல எச பாட்டாகவும் இருக்கும்.அப்படியான ஒரு நாட்டு புற தூது பாட்டு தான் "ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன்
சந்தனத்த," பாடல் . இதில் நீர் அருவி தூது பொருளாக அமைகிறது .
இளைய ராஜா ஒரு முறை தனது
வயலின் இசைக்கலைஞர் ஒருவரை பற்றி கூறும் போது, இவர் என்னை விட திறமை
மிக்கவர் என்று சொன்னதினால் , K பாலச்சந்தர், தனது அச்சமில்லை அச்சமில்லை
என்ற படத்தில் அவரை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். அவர் பெயர்
வி.எஸ். நரசிம்மன். அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் , அதில் இரண்டு பாடல்கள் செம்ம
ஹிட். " ஆவாரம் பூவு ஆறேழு நாளா" " ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன்
சந்தனத்த" என்ற பாடல்கள்.இரண்டு பாடல்களையும் அப்போது வானொலியில் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.
https://www.youtube.com/watch?v=5WKPapEz6FI&feature=emb_err_woyt
பாடல்களில் வரும் தபேலா,மத்தளம்,
கிதார், ஆகியவற்றின் இசை கோர்வைகள், interlude இசைகள் அப்படியே இளையராஜாவை
போன்றே இருக்கும். நன்கு உற்று கேட்டால் depth, tempo வில் உள்ள
வித்தியாசங்கள் புரிய வரும்.
மேகத்த தூது விட்டால் , திசை மாறி
போகும் என்று , தண்ணீரை தூது விடுகிறாள் காதலி. கூடவே முத்ததையும் அனுப்பி,
எப்போ வந்து திருப்பி எண்ணிக்கை குறையாமல் தர போகிறாய் என்று
கேட்கிறாள்....
"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"
பேச்சு
வழக்கில் எழுதப்பட்ட பாடல், (நாட்டு புற பாட்டு போன்று....) . நிறைய பேர்
இது இளையராஜா இசை அமைத்த பாடல் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பார்கள்.
(80/90 களில் தற்போது உள்ளது போன்று வாட்ஸ் ஆப் , பேஸ்புக் , செல் ஃபோன் என்று வசதிகள் கிடையது . அன்றைய காலகட்டத்தில் தனது காதலை கடிதம் மூலமாகவோ, வாழ்த்து அட்டை மூலமாகவோ , நண்பர்கள் மூலமாகவோ , அல்லது மனசின் எண்ணத்தியே தூதாக அனுப்பிவிட்டு சேர்ந்துசோ ,சேரலையோ என்று இப்பாடலில் வரும் கதாநாயகியை போன்று தவித்து கொண்டு இருந்தது ஞாபகம் வரும், இப்பாடலை கேட்கும் 80's/90 கிட்ஸ்களுக்கு, அதுவும் பெண்களுக்கு ...!)
பின் குறிப்பு :
"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த , சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"என்கிற வரிகள் 'பிள்ளைக் கணியமுது ' என்ற பழைய படத்தில் கூட வரும் . வைரமுத்து ஒரு இன்ஸ் பிரேசன்க்காக எடுத்து இருப்பாரோ.....?
"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி,
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி"
என்ற பாடலின் வரிகள் கூட நளவெண்பாவில், அன்னம் தமயந்தியின் அழகை விவரிக்கும் பகுதி தான்...... !
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து
மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
(ஓடுகிற)
மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?
(ஓடுகிற)
அருமை.
ReplyDelete