(*கண்டிப்பாக கண்டிப்பாக ஹெட் போன் / இயர் போனில் மட்டுமே கேட்க வேண்டும்* 🙏🙏🙏)
முதலில் இந்த இசையை கேட்டு பாருங்கள். நிறைய இடத்தில் நிறைய பேர் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
"போட்டி
பாடல்" இது அநேகமாக எல்லா படங்களிலும் நாம் பார்த்து இருப்போம். ஒருவருக்கு
ஒருவர் எதிர்த்து பாடி போட்டி போடுவது , உதாரணமாக " என்னமா கண்ணு
சவுக்கியமா " மிஸ்டர் பாரத் படத்தில் இடம்பெறும் பாடல், முதல் மரியாதையில்
வரும் " ஏறாத மாலை மேல ஏறி ",பாடல்கள் போல , இப்போ உங்களுக்கு புரிந்து
இருக்கும் நான் எதை பத்தி சொல்ல வருகிறேன் என்று.
அப்படிப்பட்ட ஒரு
துள்ளலான போட்டிப் பாட்டு தான் காதல் பரிசு என்ற படத்தில் வரும் "ஹேய் உன்னைத் தானே ....!" என்ற பாடல். ஏ ஆர் ரகுமான் டூயட் என்ற படத்தில் சாக்ஸ் போனை
உபயோகப் படுத்தி ஒரு மெலோடி கொடுத்து இருப்பார். ஆனால் இந்தப் பாட்டு
இளையராஜா அதே சாக்ஸ்போன்னை கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து அசத்தி இருப்பார் .
படத்தில் பாடகர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான எக்கோ (Echo ) சேர்ந்து இருக்கும். பாடல் என்னவோ போட்டி பாடல் தான் ஆனால் பாடியது ஒரே பாடகர் தான். எஸ் பி பாலசுப்பிரமணியம் மட்டுமே. கமல் பாடும்போது நார்மல் ஆகவும் எதிராளி பாடுவதுபோல இருக்கும் பொழுது கொஞ்சம் குரலை தடித்த மாதிரியும் பாடி வித்தியாசப்படுத்தி இருப்பார். கூடவே ஜானகியும் பாடி இருப்பார்.
1.18 யிள் இருந்து ஆரம்பம் ஆகும் இடை இசையை கேட்டு பாருங்கள். லீட் கித்தார், டிரம்ஸ் , இதனுடன் கீ போர்டு இணைந்து இருக்கும். ஒரு துள்ளலான பாட்டிற்கு கித்தார் , ட்ரம்ஸ், போங்கோ , ஆகியவற்றை உபயோகப்படுத்தினால் அது ஒத்துக் கொள்ள கூடியது ஆனால் நடனத்திற்கு கீபோர்டை உபயோகப்படுத்தி அசத்தியிருப்பார் இளையராஜா.
1.40 வினாடியில் இருந்து 1.45 வரை மட்டுமே வரும் ஐந்து வினாடிகளில் ஒரு த்ரில்லான இசையை நமக்கு காட்டியிருப்பார். படத்தின் கதைப்படி ராதவை கொல்ல ஒரு கும்பல் காத்துக்கொண்டு இருக்கும். அந்த ஆபத்தான சுச்சுவேஷன்னை அந்த ஐந்து வினாடிகளில் நாம் உணர முடியும்.
Download Here (HQ File)
இதுவரை நார்மலாக போய்க்கொண்டிருந்த ட்ரம்ஸ் இசை அதன் பிறகு சும்மா " டடம் , டடம் ,டடம் என்று பீட்ஸ்ஸூடனும் , டஸ் டஸ் என்ற ரைட் cymbal லும் , (ட்ரம்ஸ் வாசிப்பவர்கள் பக்கத்தில் ஒரு பெருசா வெண்கல தட்டு போல இருக்குமே அது தான்....! ) சும்மா நச்சென்று இருக்கும்.
Flim:Kadhal Parisu |Music:Maestro Illayaraja| Lyricist: Vairamuthu | Singers : S P Balasubramaniyam & S Janaki, | Year : 1987
4:04 இருந்து ஆரம்பிக்கும் கீபோர்டு அல்லது பியானோவின் இசை, பீதோவனின் இசைக்குறிப்புகளை கேட்பது போல இருக்கும். அவ்ளோ வேகம், அவ்ளோ துள்ளல்.

"வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா" என்ற வரிகளுக்கு
பிறகு ஆரம்பமாகும் பாருங்கள் சாக்ஸாபோன் அட்டகாசம், 2.30 வினாடியில்
ஆரம்பித்து 3:22 வரை செம துள்ளலாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு டிரம்ஸ்
பீட் கூடவே கைகோர்த்துக்கொண்டு வெளுத்து வாங்கி இருக்கும்.
4:04 இருந்து ஆரம்பிக்கும் கீபோர்டு அல்லது பியானோவின் இசை, பீதோவனின் இசைக்குறிப்புகளை கேட்பது போல இருக்கும். அவ்ளோ வேகம், அவ்ளோ துள்ளல்.
Beethovan fur elise:
பாடலில் பாஸ் கிடார், வயலின் இன்னபிற சமாச்சாரங்கள் எப்பொழுதும் போல உண்டு என்றாலும் பாடலின் துள்ளலுக்கு ட்ரம்ஸ், சாக்சபோன், கீபோர்டு / பியானோ முக்கிய பங்கு ஆற்றியிருக்கும். டிரம்ஸ் வாசித்தவர் புருஷோத்தமன் ஆகத்தான் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் . எனக்கு சரியாக தெரியவில்லை.அவர் மறைந்து விட்டார் . இந்த பதிவு கூட அவருக்கு செலுத்தும் அஞ்சலி .
இந்தப் பாடலை கேட்கும் போது உங்களது தலை , கை , கால்கள் தாளத்திற்கு ஏற்ப ஆடாமல் இருந்தால் நீங்கள் உடனடியாக ஒரு டாக்டரை🚑🚑 பார்ப்பது நல்லது. கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 🙏🙏🙏

படத்தில் டான்ஸ்
ஃப்ளோர் செம ஆடம்பரமாக செய்யப்பட்டிருக்கும். கால்களுக்குக் கீழே ப்ளோரில்
ரன்னிங் லைட் என்று சொல்லப்படும் வண்ண விளக்குகள் அணைந்து அணைந்து
எரிந்துகொண்டு இருக்கும். சுவற்றில் மற்றும் இன்னபிற பார்க்கும் இடங்களில்
எல்லாம் பல்பை ஒளிர விட்டு இருப்பார்கள். நடனமாடுபவர்களை தவிர்த்து எல்லா
இடத்திலும் பல்பு சும்மா பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டே தான்
இருக்கும்.
இவ்வளவு துள்ளலான ஒரு பாட்டிற்கு நடனம் அமைத்தது யார்
என்று தெரியவில்லை ஆனால் படு மோசம். காராத்தே ஸ்கூலில் எக்ஸார்சைஸ் செய்வது
போன்று கையை ,காலை ஆட்டிக்கொண்டு இருப்பார்கள் . இந்தப் பாட்டிற்கு
இப்பொழுது நடனம் அமைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவை
பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
பாடல் வரிகள் :
ஏ உன்னைத் தானே ஹா...
ஏ உன்னைத் தானே ஹா...நீ எந்த ஊரு
என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
இளையவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்
ஏ உன்னைத் தானே ஹு
ஏ உன்னைத் தானே ஹா..
ஏ உன்னைத் தானே
நீயா நானா யார் தான் இங்கே ரொம்பப் பெரியவன் வலியவன்
மோதும் போதும் சீறும் போதும் என்றும் புலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா....!
ஏ உன்னைத் தானே ஏய்..
ஏ உன்னைத் தானே
நீ எந்த ஊரு
என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
இளையவள் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்
ஏய் உன்னைத் தானே ஹே ப ரபப் பப ரபப
ஏய் உன்னைத் தானேஹா..
டூ ..ட்டு டு ..டூ டு....
பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப் பழகலாம் தழுவலாம்
வீரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப் பருகலாம் உருகலாம்
பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்
நீ சொன்னால் தேன்மாரி பொழியலாம் வழியலாம்
அள்ளிக்கொள் என்று சொல்லும் அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு
நெற்றிக்குள் ஏதோ மின்னல் நெளியுது
ஏய்
உன்னைத் தானே ஹு..
ஏய்
உன்னைத் தானே ஹு
நீ எந்த ஊரு
என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
இளையவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட தகத்ஜம்
திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்
ஏய்
உன்னைத் தானே ஹ ஹு..ஹா
ஏய்
உன்னைத் தானே ஹு ஹு
ஏய்...
டூ ..ட்டு டு ..டூ டு....
ஏய்...டூ ..ட்டு டு ..டூ டு....
No comments:
Post a Comment