"வயலின்" இது ஒரு கம்பி வாத்திய கருவி . ஃபிடில் என்றும் சொல்லுவார்கள். இத்தாலியில் இருந்து வந்தது இந்த இசைக் கருவி. இத்தாலியில் அநேகமாக எல்லோருக்கும் வயலின் வாசிக்க தெரியும் .பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்த கருவியை உண்மையில் வாசிப்பதற்கு
மிகவும் சிரமம். கொஞ்சம் பிசகினாலும் இசை அபஸ்வரமாக போய்விடும். இதில்
தேர்ச்சி பெறுவதற்கு மிகுந்த பயிற்சி தேவைப்படும்.குன்னக்குடி வைத்திய நாதன் இதில் கரை கண்டவர்.
அனேகமாக எல்லா மியூசிக்கல் டைரக்டர்களும் வயலின் இசையை தங்களது பாடல்களில் வைத்திருப்பார்கள். வயலின் இசையானது பாடல்களின் நடுவே வரும் ஒரு இசையாகவே இருக்கும்.வயலின் இசைக் கருவியைக் கொண்டு சோகத்தையும் சந்தோஷத்தையும் மிகவும் எளிதாக எடுத்துக்காட்டலாம்.
ஆனால் வயலினை மட்டும் கொண்டு தனி ஆவர்த்தனம் ஆக செய்து ஒரு பாடல் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்றி இருப்பார். கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடலுக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து மணி என்ற வயலின் இசைப்பவர் இசைத்த பாடல் இது.
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த மெட்டுக்கு பாட்டை அமைத்தார். பாடல் உருவான விதம் பற்றி கீழே உள்ளது. பட்டினப் பிரவேசம் என்ற படத்தில் வரும் "வான் நிலா அல்ல உன் வாலிபம் நிலா" என்ற பாடல் கதா நாயகி மெட்டு போடுவதும் , அதற்க்கு ஏற்ப கதாநாயகன் பாடுவது போன்று அமைந்து இருக்கும் . எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இருப்பார்.
இதேபோன்று வறுமை நிறம் சிகப்பு என்ற படத்தில் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என்ற பாடலும் கதாநாயகி மெட்டுப்போடு கதாநாயகன் பாடுவது போன்று அமைந்திருக்கும் .
(128 Bit AAC File 👇 )(HQ File)
பதிவிறக்கம் செய்ய Download Here
Flim : Pattina Piravesam Music: M.S.Viswanathan | Lyricist: Kannadhasan | Singer:S.P. Balasubramaniyam | Year : 1977
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான் நிலா நிலா அல்ல)
பாடல் உருவான விதம் :
நன்றி :அட்ரா சக்க💗🙏

டைரக்டர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘பட்டினப் பிரவேசம்.’ அதற்கான இசை கம்போசிங்குக்காக நானும், கவிஞரும் கே.பி. சாரோடு உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர் சொன்ன சிசுவேஷனுக்கு நான் ஒரு மெட்டுப் போட்டேன். அதற்கு கவிஞர் பாட்டு எழுத வேண்டும். ‘விசு! மெட்டை வாசிடா!’ என்று உரிமையோடு சொன்னார் கவிஞர். என் விரல்கள் ஹார்மோனியத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்க, நான் வாயால் அந்த மெட்டைப் பாடிக் காட்டி னேன். ‘நா...நன்னா...நன்னா... நன்னா...நன்னா..ந நான .. நா.’
‘மடையா! நிறுத்து!’ உத்தரவு போட்டார் கவிஞர். ‘என்னடா! நீ பாட்டுக்கு நா... நன்னான்னு வாயில வந்தபடி சொல்லிக்கிட்டே போறே! எனக்குச் சரியான வார்த்தைகள் வரணுமில்லையா? நீ என்ன பண்ணறே... நல்லதா வேற ஒரு மெட்டுப் போடு!’
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் கே.பி., ‘அந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கே. அதையே படத்துல உபயோகிச்சுக்கலாமே!’ என்று சொல்லிவிட்டு, கவிஞரைப் பார்த்து, ‘இந்த டியூனுக்கு உங்களால அற்புதமான வார்த்தைகளைப் போட்டு, அருமையான பாட்டு ஒன்றைத் தர முடியும்’ என்றார். அடுத்து, கவிஞர் கவனத்தை ஈர்க்காமல், மெதுவாக என்னிடம், ‘டியூன் அபாரம்; கவிஞரை உசுப்பி விட்டு, ஒரு நல்ல பாட்டை வாங்கிடுங்க’ என்று சொல்லி விட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.
நான்
கவிஞரிடம், ‘நீயெல்லாம் என்னயா பெரிய கவிஞன்? இந்தச் சந்தத்துக்கு ஒரு பாட்டு எழுத முடியாதுன்னு சொல்லறயே?’ என்று ஆரம்பிக்கவும், அவர், ‘இது ஒரு சாதாரணமான சந்தம் தான்! இதுக்குப் போய் என்னால பாட்டு எழுத முடியாதா?’ என்று வெடுக்கென்று கேட்டார். நான் உடனே கொஞ்சம் குழைவான குரலில், ‘இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா? முயற்சி பண்ணினால் கண்டிப்பாக ஓர் அற்புதமான பாட்டு தானாக வந்து விழும்!’ என்று ஐஸ் வைத்தேன்.
காரணம், கவிஞரை மட்டம் தட்டுவதைப் போல லேசாகத் தாக்கி விட்டு, உடனே, அவரைத் தூக்கி வைத்துப் பேசினால், அவரிடம் காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடலாம் என்ற தொழில் ரகசியத்தை நான் ரொம்ப நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருப்பவன் ஆயிற்றே! அவரது ஈகோவை லேசாகத் தட்டிவிட்டதும், கவிஞர் ஆவேசமாகச் \ செயல்பட ஆரம்பித்தார்.
‘விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என்றார். கவிஞர் மூடுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டேன் நான். இதுதான் சரியான சந்தர்ப்பம்! இப்போது தூண்டிலை வீசினால் பாட்டு மீன் சிக்கிக் கொள்ளும் என்று முடிவு செய்தேன். சற்று நேரத்துக்கு முன்பு, ‘நா...நன்னா... நன்னா...’ என்று போட்ட டியூனையே, ‘லா...லல்லா..லல்லா...’ என்று மாற்றிப் பாடிக்காட்டினேன். கண்ணை மூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள் மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூட ‘லா’ வில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும் சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலு ‘லா’தான் பாக்கி’ என்றேன். ‘என்னடா சொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலு ‘லா’தான் உங்க பாட்டுல வரல!’ என்றதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.
- ராணி மைந்தன்
தொகுப்பு: எஸ்.சந்திரமௌலி
நன்றி - கல்கி , புலவர் தருமி
No comments:
Post a Comment